குசல் பெரேராவுக்கு சிக்கல்!

வங்கதேச அணிக்கு எதிரான தொடரில் இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் குசல் பெரேரா காயத்தால் அவதிப்படுவதால் பங்கேற்கும் வாய்ப்பு குறைவு என தெரியவந்துள்ளது.
இலங்கையில் சுற்றுப்பயணம் செய்துள்ள வங்கதேச கிரிக்கெட் அணி நான்கு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது.
முதல் போட்டி வரும் சனிக்கிழமை தொடங்கவுள்ளது. இதனிடையில், நேற்று வங்கதேச அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் இலங்கை அணி விளையாடியது.
இதில், இலங்கை அணியின் தொடக்க வீரர் குசல் ஜனித் பெரேரா 64 ஓட்டங்களுடன் ஆடி கொண்டிருந்த போது அவர் தொடை பகுதியில் காயம் ஏற்ப்பட்டது.
இதனால் அவர் மைதானத்திலிருந்து வெளியேறினார். காயம் காரணமாக நாளை மறுநாள் ஆரம்பமாகும் தொடரில் குசல் பெரேரா விளையாட முடியாத நிலை ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
உலகக்கிண்ண T-20 இறுதிப் போட்டி: நடுவர்களாக இலங்கையர் இருவர்!
ஸ்ரீசாந்த் கோரிக்கைக்கு பிசிசிஐ மறுப்பு!
கண்ணீருடன் விடைபெற்றார் சானியா மிர்சா!
|
|