கிஸாந்தின் அபார ஆட்டத்தால் கிண்ணத்தை வென்ற சென்றலைட்ஸ் அணி!

Thursday, June 21st, 2018

ஜொலிஸ்ரார்ஸ் விளையாட்டுக்கழகத்தால் பி.எஸ்.குமாரசுவாமி ஞாபகார்த்தமாக நடாத்தப்பட்ட கூடைப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டியில் ஈஸ்வரதாசன் கிஸாந்தின் அபார ஆட்டத்தினால் ஜொலிஸ்ரார்ஸ் அணியை வீழ்த்தி சென்றலைட்ஸ் விளையாட்டுக்கழகம் சம்பியன் ஆகியது.

யாழ்ப்பாணம் ஜொலிஸ்ரார்ஸ் விளையாட்டுக்கழகம் மறைந்த முன்னாள் அதிபர் பி.எஸ்.குமாரசுவாமி ஞாபகார்த்தமாக யாழ்.மாவட்ட கூடைப்பந்தாட்ட அணிகளுக்கிடையில் கூடைப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி கூடைப்பந்தாட்ட திடலில் நடைபெற்று வந்தது.

சென்றலைட்ஸ் விளையாட்டுக்கழகம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விளையாட்டுக்கழகம் ஜொலிஸ்ரார்ஸ் விளையாட்டுக்கழகம் கொக்குவில் மத்திய சனசமூக நிலையம் பற்றீசியன் அணி கே.கே.எஸ். விளையாட்டுக்கழகம் மற்றும் ஸ்கந்தா ஸ்ரார்ஸ் விளையாட்டுக்கழகம் என்பன இந்தச் சுற்றுப்போட்டியில் பங்குபற்றின.

அணிகள் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு பிரிவுகளிலும் முதலிரு இடங்களைப் பெற்ற அணிகள் பிளே ஓவ்; சுற்றுக்குத் தகுதி பெற்றன.

ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடத்தைப் பெற்ற அணிகளான சென்றலைட்ஸ் மற்றும் பற்றீசியன் அணியும் முதலாவது தகுதியாளர் போட்டியில் மோதின.

இதில் சென்றலைட்ஸ் அணி 67:51 என்ற புள்ளிகள் அடிப்படையில் வென்று இறுதிக்குத் தகுதி பெற்றது. பற்றீசியன் அணி அடுத்த வாய்ப்புக்காக காத்திருந்தது.

ஒவ்வொரு பிரிவிலும் இரண்டாவது இடத்தைப் பெற்ற அணிகளான கொக்குவில் மத்திய சனசமூக நிலையம் மற்றும் ஜொலிஸ்ரார் அணிகள் எலிமினேற்றர் போட்டியில் மோதின.

இதில் ஜொலிஸ்ரார்ஸ் அணி 86:33 என்ற புள்ளிகள் அடிப்படையில் வென்றது. கொக்குவில் அணி சுற்றிலிருந்து வெளியேறியது.

தொடர்ந்து இரண்டாவது தகுதியாளர் போட்டி பற்றீசியன் அணிக்கும் ஜொலிஸ்ரார்ஸ் அணிக்கும் இடையில் நடைபெற்றது.

இதில் ஜொலிஸ்ரார்ஸ் அணி 60:43 என்ற புள்ளிகள் அடிப்படையில் வென்று இறுதிக்குள் தகுதி பெற்றது.

ஜொலிஸ்ரார்ஸ் அணிக்கும் சென்றலைட்ஸ் அணிக்கும் இடையிலான இறுதிப்போட்டி 17 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

முதல் கால்ப்பாதியாட்டம் முடியும் போது அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜொலிஸ்ரார்ஸ் அணிஇ 18:13 என்ற புள்ளிகள் அடிப்படையில் முன்னிலையில் இருந்தது.

எனினும் இரண்டாவது கால்ப்பாதியாட்டத்தில் சிறப்பாக ஆடிய சென்றலைட்ஸ் அணி இரண்டாவது கால்ப்பாதியாட்டம் முடியும் போது 33:28 என்ற புள்ளிகள் அடிப்படையில் முன்னிலை வகித்தது.

அதே உத்வேகத்துடன் தொடர்ந்து ஆடிய சென்றலைட்;ஸ் அணி மூன்றாவது கால்ப்பாதியாட்டம் முடியும் போதுஇ 50:42 என்ற புள்ளிகள் அடிப்படையில் முன்னிலை வகித்தது.

நான்காவதும் இறுதியுமான கால்ப்பாதியிலும் சென்றலைட்ஸ் அணியின் ஆதீக்கம் தொடர ஆட்டம் முடியும் போது சென்றலைட்ஸ் அணி 63:51 என்ற புள்ளிகள் அடிப்படையில் வென்று சம்பியனாகியது.

இறுதிப்போட்டியில் விளையாடிய அணிகளில் தொடரின் சிறந்த வீரனாக ஜொலிஸ்ரார்ஸ் அணியிலிருந்து ஆர்.கீர்த்தனும்

இறுதிப் போட்டியின் சிறந்த வீரனாக சென்றலைட்ஸ் அணியிலிருந்து வி.தயாளனும் சிறந்த வீரர்களாக தெரிவு செய்யப்பட்டனர்.

Related posts: