பார்வைக்காக உலகக் கிண்ணம் இலங்கையில்!

Friday, March 24th, 2017

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் இடம்பெறும் சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான கிண்ணம் நேற்று கொழும்பை வந்தடைந்தது. இது தொடர்பான நிகழ்வு நேற்று கொழும்பிலுள்ள இலங்கை கிரிக்கெட் வளாகத்தில் இடம்பெற்றது.

இந்த கிண்ணம் போட்டியில் பங்கேற்கும் 8 நாடுகளுக்கும் வலம் வரவுள்ள நிலையில் நேற்று இந்தியாவில் இருந்து இலங்கை வந்தடைந்தது.பல்வேறு இடங்களுக்கு ரசிகர்களின் பார்வைக்காக செல்லும் கிண்ணம் மொரட்டுவ ,மஹரகம,நுகேகொட,நகர மண்டபம் காலி முகத்திடல் மற்றும் சுதந்திர சதுக்கத்தில் பொதுமக்கள் மற்றும் ரசிகர்களின் பார்வைக்காக வாகன ஊர்தி மூலம் கொண்டு செல்லப்படட்டது.

எதிர்வரும் ஜுன் மாதம் 1ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை இங்கிலாந்து,வேல்ஸில் போட்டிகள் இடம்பெறவுள்ளது.

இதேவேளை கிண்ணத்தை ரசிகர்களுக்கு உத்தியோகபூர்வமாக பார்வையிடுவதற்காக இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் அஞ்சலோ மெத்திவ்ஸால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதில் இலங்கை கிரிக்கெட்டின் செயலாளர் மொஹான் டி சில்வா ,பிரதம நிறைவேற்று அதிகாரி அஷ்லி டி சில்வா மற்றும் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இந்த கிண்ணத்தின் உயரம் 46 செ.மீ ,பாரம் 3.1 கிலோ கிராம் எடை கொண்டது.

ஐசிசி நொக்அவுட் கிண்ணம் என 1998ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட போட்டி பங்களாதேஷின் டாக்கா நகரில் முதல் போட்டித் தொடர் ஆரம்பிக்கப்பட்டது.பின்னர் 2000ம் ஆண்டு கென்யாவிலும் இடம்பெற்றது.பின்னர் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை என ஆரம்பிக்கப்பட்ட தொடர் ஐ.சி.சி சம்பியன் கிண்ணம் என பெயரிடப்பட்டது.

2009 ம் ஆண்டு இடம்பெற்றது,அத்துடன் தென்னாபிரிக்காவில் நடைபெற இருந்த ஆட்டம் பாகிஸ்தானுக்கு மற்றப்பட்டு 2008 ம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற இருந்த ஆட்டம் தவிர்க்க முடியாத காரணத்தால் தடைப்பட்டது.

பின்னர் இந்த ஆட்டம் நான்கு வருடங்களுக்கு ஒரு தடவை நடடைபெறும் என்று அறிவிக்கபட்டது.ஆனால் இந்த வருடம் இடம்பெறும் போட்டி கடைசி போட்டி என்றும் அறிவிக்கப்பட்டது.தரவரிசையில் முதல் 8 இடங்களில் உள்ள அணிகளே இச்சுற்றுப்போட்டியில் பங்கேற்கவுள்ளது.

முதல் சுற்று இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு நான்கு அணிகளில் முதல் இரண்டு அணிகள் ஒரு குழுவில் தெரிவு செய்யப்பட்டு அரையிறுதியாட்டம் இடம்பெற்று இறுதிப்போட்டி இடம்பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts: