டோனிக்கும் எனக்கும் பிரச்சனையா? – கோஹ்லி!

Tuesday, November 7th, 2017

டோனிக்கும், தனக்கும் உள்ள உறவு மிகவும் முக்கியமானது என்றும், அதை யார் நினைத்தாலும் பிரிக்க முடியாது என்று கோஹ்லி கூறியுள்ளார்.

இந்திய அணியின் தலைவரான விராட் கோஹ்லி சமீபத்தில் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் தனக்கும், டோனிக்கும் இடையில் இருக்கும் உறவைப்பற்றி கூறினார்.

அவர் கூறுகையில், எனக்கும் டோனிக்கும் மோதல் நிலவுவதாக நிறைய பேர் கதைகட்டி வருகின்றனர். சிறப்பு என்னவெனில் அத்தகைய கதைகளையோ செய்திகளையோ நானும் படிப்பதில்லை, அவரும் படிப்பதில்லை.இத்தகைய செய்திகள் குறித்து நாங்கள் எங்களுக்குள்ளேயே சிரித்துக் கொள்வோம்.திட்டமிடுதல், ஆட்டத்தில் என்ன நடக்கிறது, என்ன செய்யலாம் என்பது பற்றிய கூர்மையான கிரிக்கெட் அறிவில் டோனியை விஞ்சி நான் யாரையும் கண்டதில்லை.10 முறைகளில் நான் 8-9 முறைகள் அவரது ஆலோசனையை நாடிய போதெல்லாம் அனைத்தும் சாதகமாகவே முடிந்துள்ளன.டோனிக்கு எனக்கும் கிரீசில் நல்ல புரிதல் உண்டு, அவர் 2 ஓட்டங்கள் என்றால் நான் கண்ணை மூடிக்கொண்டு 2 ஓட்டங்களுக்கு ஓடி விடுவேன், காரணம் அவரது கணிப்பு தவறாது என்று கோஹ்லி கூறியுள்ளார்.

Related posts: