டெஸ்ட் கிரிக்கெட்டிலும் ஜெர்சி எண் – ஐசிசி!

Thursday, March 21st, 2019

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ஜெர்சி எண்களை கொண்டு வர ஐ.சி.சி திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

கிரிக்கெட்டில் வீரர்களின் ஜெர்சி எண்கள் எப்போதும் ரசிகர்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் ஒன்றானவை ஆகும். ஒருநாள் கிரிக்கெட், டி20 மற்றும் லீக் போட்டிகளில் ஜெர்சி எண்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஆனால், டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை ஜெர்சி எண்கள் பயன்படுத்தப்படவில்லை. சில ஆண்டுகளாக டெஸ்ட் போட்டியில் பல மாற்றங்கள் வந்து கொண்டு இருக்கின்றன. குறிப்பாக பகல் இரவு ஆட்டம், பிங்க் பந்து ஆகியவை நடைமுறையில் உள்ளன.

இந்நிலையில், இனி டெஸ்ட் போட்டிகளில் ஜெர்சி எண்கள் வரப்போகிறது. இதற்கு முதற்படியாக, அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரில் ஜெர்சி எண்களை அறிமுகப்படுத்த உள்ளது.

ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த வீரர்களின் அணிந்திருக்கும் ஜெர்சி எண்ணை உற்று நோக்கி பரவசமடைவார்கள். எனவே, இதனை கருத்தில் கொண்டு டெஸ்டிலும் ஜெர்சி எண்களை கொண்டுவரப்பட உள்ளதாக தெரிய வருகிறது.

ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ள ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இந்த நடைமுறை கொண்டு வரப்பட உள்ளது. இந்நிலையில், ஷெப்பீல்டு அணி மற்றும் இங்கிலீஷ் கவுண்டி கிரிக்கெட் தொடரில் இது போன்று ஜெர்சிகளில் எண்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இதுகுறித்து அவுஸ்திரேலிய அணி வீரர் டிராவிஸ் ஹெட் கூறுகையில், ‘இந்த புதிய மாற்றம் ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த வீரர்களைக் கண்டறிய உதவும். மேலும், இதனால் எவ்வித தொந்தரவும் இல்லை. ரசிகர்களுக்கு உதவுகிறது என்றால் நல்ல விடயம் என்று நான் நினைக்கிறேன்’ என தெரிவித்துள்ளார்

Related posts: