கால்பந்து போட்டியில் சாதித்துக் காட்டிய யாழ்ப்பாண மாணவிகள் !
Tuesday, August 8th, 2017
இலங்கை பாடசாலைகள் கால்பந்தாட்டச் சங்கம் நடத்திய தேசிய மட்ட கால்பந்தாட்டத் தொடரில் 16 வயதுப் பெண்கள் பிரிவில் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரிக்கு மூன்றாம் இடத்தை பெற்றுள்ளது.
திருகோணமலை கிண்ணியாவில் கடந்த சனிக்கிழமை பிற்பகல் நடைபெற்ற மூன்றாம் இடத்துக்கான ஆட்டத்தில் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி அணியை எதிர்த்து கொழும்பு விதான மகாதேவி வித்தியாலய அணி மோதியது. முதல் பாதியாட்டத்தில் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி அணி வீராங்கனை திலக்சனா 5ஆவது நிமிடத்தில் ஒரு கோலைப் பதிவு செய்ய 1:0 என்ற கோல் கணக்கில் அந்த அணி முன்னிலை வகித்தது.
இரண்டாம் பாதியின் 12ஆவது நிமிடத்தில் சர்மிகா ஒரு கோலைப் பதிவு செய்ய ஆட்ட நேர முடிவில் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி அணி 2:0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று வெண்கலப் பதக்கத்தை சுவீகரித்தது.
Related posts:
|
|
|


