மீண்டும் விஸ்வரூபமெடுத்த டோனி!

Wednesday, January 11th, 2017

இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட், ஒரு நாள் போட்டிகள் மற்றும் டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

டெஸ்ட் தொடரை இந்திய அணி 4-0 என்ற கணக்கில் வென்று அசத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து இரு அணிகளுக்கிடையேயான ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர் வரும் 15 ஆம் திகதி முதல் ஆரம்பமாக உள்ளது.

இதில் இந்திய அணியின் தலைவராக டோனி விலகியதன் காரணமாக விராட் கோஹ்லி தலைவராக செயல்பட உள்ளார்.

இந்நிலையில் இரு அணிகள் மோதும் பயிற்சி ஆட்டம் இன்று மும்பையில் நடைபெற்றது. இப்போட்டிக்கு தலைவராக டோனி செயல்பட்டார். டோனி தலைவராக செயல்படும் கடைசி போட்டி இது வாகும்.

இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய ஏ அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 305 ஓட்டங்கள் எடுத்தது. 306 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாடிய இங்கிலாந்து லெவன் அணி 48.5 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 307 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.

டோனி தலைவராக கடைசி போட்டி என்பதால் மைதானத்தில் ரசிகர்கள் கூட்டம் அலை மோதியது. ரசிகர்களுக்கு ஏற்றார் போலவே டோனியின் ஆட்டமும் அதிரடியாக இருந்தது. ஆட்டத்தின் இறுதி ஓவரில் டோனி 6,4,4,2,6,1 மொத்தம் 23 ஓட்டங்கள் குவித்து அசத்தினார்.

இதைக் கண்ட வர்ணனையாளர்கள் பழைய டோனி இந்திய அணிக்கு திரும்பிவிட்டார் என்று கூறியுள்ளனர். மேலும் இப்போட்டியில் சதம் விளாசிய இந்திய வீரர் ராயுடு டோனி குறித்து கூறுகையில், என்னுடைய தனிப்பட்ட முறையில் டோனி ஒரு சிறந்த தலைவராக இருந்துள்ளார்.

அவர் தன்னம்பிக்கை வீரர், அவர் தலைமையிலான கடைசி போட்டியில் தான் சதம் அடித்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றாலும் தன்னுடைய வலது கண்களில் ஒரு ஓரத்தில் அவரை நினைத்து கண்ணீர் வருகிறது என்று உணர்ச்சி பொங்க கூறியுள்ளார்.

இந்திய அணியின் மற்றொரு அதிரடி ஆட்டக்காரரான யுவராஜ்சிங் டோனி தலைவர் பதவியில் இருந்து விலகியதால், இனி அவரால் சுதந்திரமாக விளையாடமுடியும், அவருடைய அதிரடியை காட்டுவார் என்று கூறியிருந்தார்.

அதே போன்று இன்றைய போட்டியில் டோனி தன்னுடைய அதிரடி வேட்டையை துவங்கியுள்ளார். 40 பந்துகளை சந்தித்த அவர் 8 பவுண்டரி 2 சிக்ஸர் என 68 ஓட்டங்கள் குவித்தார்.

 625.500.560.350.160.300.053.800.900.160.90

Related posts: