ஓய்வு பெறுகிறாரா மெஸ்சி?

Monday, July 2nd, 2018

உலக கோப்பை வெல்ல முடியாத சோகத்தில் உள்ள அர்ஜென்டினா அணி கேப்டன் மெஸ்சி மீண்டும் ஒய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அர்ஜென்டினா அணி கேப்டன் மெஸ்சி 30. கடந்த 2005ல் சர்வதேச போட்டிகளில் கால் பதித்தார். ஸ்பெயினின் பார்சிலோனா கிளப் அணிக்காக அசத்தும் இவர் உலக கால்பந்தின் சிறந்த வீரருக்கான ‘பிபா’ விருதை ஐந்து முறை (2009  2010  2011  2012 2015) வென்றார். ஆனால் தேசிய அணிக்காக ஒரு முறை கூட உலக கோப்பை வென்று தந்தது கிடையாது.

கடந்த 2014 தொடரில் பைனலுக்கு முன்னேறிய போதும் ஜெர்மனியிடம் தோற்றதால் திடீரென சர்வதேச அரங்கில் இருந்து ஓய்வு அறிவித்தார். பிறகு முடிவை மாற்றிக் கொண்டார். தொடர்ந்து நடந்த 2015  2016 கோபா அமெரிக்க தொடரின் பைனலில் இரு முறையும் சிலியிடம் தோற்றது அர்ஜென்டினா.

இம்முறை நம்பிக்கையுடன் களம் கண்ட அர்ஜென்டினா அணி லீக் சுற்றில் தட்டுத்தடுமாறித் தான் கரை சேர்ந்தது. ஐஸ்லாந்து அணிக்கு எதிராக ‘பெனால்டி’ வாய்ப்பை வீணடித்த மெஸ்சிஇ ‘ரவுண்டு–16’ சுற்றிலும் சொதப்ப மீண்டும் நிறைவேறாத கோப்பை கனவுடன் நாடு திரும்புகிறார்.

உலக கோப்பை தொடரில் மெஸ்சி ரொனால்டோ என நட்சத்திர வீரர்கள் ‘ரவுண்டு–16’ சுற்றுடன் திரும்பியது ஏமாற்றம் தான். இதனால் ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் குறைந்துள்ளது. இருவரும் ‘பிபா’ சிறந்த வீரர் விருதை தலா 5 முறை வென்றனர். ஆனால் மிகப்பெரிய தொடரில் சொதப்புகின்றனர்.

உலக கோப்பை ‘நாக் அவுட்’ சுற்றில் மெஸ்சி கடைசியாக விளையாடிய 8 போட்டிகளில் (756 நிமிடம்) 23 முறை முயற்சித்தும் ஒரு கோல் கூட அடிக்கவில்லை. மெஸ்சியை போலஇ இத்தொடரில் ரொனால்டோவும் (எதிர்–ஈரான்) ‘பெனால்டியை’ வீணடித்தார். தவிர ‘நாக் அவுட்’ சுற்றில் ரொனால்டோ கடைசியாக விளையாடிய 6 போட்டியில் (514 நிமிடம்) 25 முறை முயற்சித்தும் இன்னும் ஒரு கோல் கூட அடிக்கவில்லை.

கடந்த 2006ல் முதல் உலக கோப்பை தொடரில் விளையாடினார் மெஸ்சி. இளம் வயதில் (18 வயதுஇ 357 நாட்கள்) இத்தொடரில் பங்கேற்ற முதல் அர்ஜென்டினா வீரரான இவர் தொடர்ந்து (2006  2010  2014  2018) 12 ஆண்டுகள் முயற்சித்தும் உலக கோப்பை கிடைக்காதது ஏமாற்றம் தான்.

இதுவரை 128 போட்டியில் 65 கோல் அடித்துள்ள மெஸ்சி அர்ஜென்டினா சார்பில் அதிக கோல் அடித்த வீரர்கள் பட்டியலில் முன்னிலை வகிக்கிறார்.  கடந்த 2008ல் நடந்த பீஜிங் ஒலிம்பிக்கில் மெஸ்சி இடம் பெற்ற அர்ஜென்டினா அணி தங்கம் வென்றது இவருக்கு ஆறுதல் தான்

Related posts: