உதைபந்தாட்டம்: வதிரி டயமன்ஸ் இறுதிக்கு சென்றது!

Monday, September 4th, 2017

இமை­யா­ணன் மத்­தி­யின் கால்­பந்­தாட்­டத் தொட­ரில் வதிரி டய­மன்ஸ் விளை­யாட்­டுக் கழ­கம் இறுதி­யாட்­டத்­துக்­குத் தகுதி பெற்­றது.

இமை­யா­ணன் மத்­திய விளை­யாட்­டுக் கழ­கம் 35 வய­துப் பிரிவு அணி­க­ளுக்கு இடை­யில் நடத்­தும் கால்­பந்­தாட்­டத் தொட­ரின் ஆட்­டங்­கள் குறித்த கழக மைதா­னத்­தில் இடம்­பெற்று வரு­கின்­றன.

நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்ற அரை­யி­றுதி ஆட்­ட­மொன்­றில் கர­வெட்­டிப் பிர­தேச செய­லக அணியும் வதிரி டய­மன்ஸ் விளை­யாட்­டுக் கழ­க­மும் பலப்­ப­ரீட்சை நடத்­தின. முதல் பாதி­யின் முடிவில் 2:1 என்ற கோல் கணக்­கில் முன்­னிலை வகித்­தது டய­மன்ஸ் அணி.

இரண்டாம் பாதியின் 14ஆவது நிமி­டத்­தில் அர­விந்­த­னும் 16ஆவது நிமி­டத்­தில் ராஜ்­கு­மா­ரும் டயமன்­ஸின் சார்­பாக கோல்­க­ளைப் பதி­வு­செய்­த­னர். முடி­வில் 4:1 என்ற கோல் கணக்­கில் வெற்றிபெற்று இறு­திக்­குத் தகுதி பெற்­றது டய­மன்ஸ் அணி. ராஜ்­கு­மார் ஆட்­ட­நா­ய­க­னா­னார்.

Related posts: