ஒலிம்பிக்கில் வரலாற்றுச் சாதனையை தொட்ட உசைன் போல்ட்!

Monday, August 15th, 2016

ஒலிம்பிக் போட்டியில் 100 மீட்டர் ஓட்டப்போட்டியில் தொடர்ந்து மூன்று முறை வென்றியீட்டி உசைன் போல்ட் சாதனை படைத்துள்ளதுடன் குறித்த சாதனையை படைத்திருக்கும் முதலாவது நபர் என்ற பெருமை பெற்றிருக்கிறார்.

ரியோவில் ஆயிரக்கணக்கான ரசிகர்களின் மத்தியில் ஜமைக்கா தளகட வீரரான உசைன் போல்ட் 9.81 வினாடிகளில் ஓடி, தன்னுடைய முக்கிய போட்டியாளரான அமெரிக்காவின் ஜஸ்டின் காட்லினை விட முன்னிலை பெற்றார். இந்த வெற்றியானது, ஒலிம்பிக்கில் ”மூன்று – மூன்று” அதாவது 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர் தொடர் ஓட்டம் என மூன்று போட்டிகளில் மூன்று முறை தொடர்ச்சியாக தங்கப்பதக்கம் வெல்லும் வரலாற்று சாதனைக்கு நெருக்கமாக அவரை கொண்டுவந்துள்ளது.

முன்னதாக ஓட தகுதி இழந்த 2011 ஆம் ஆண்டு உலக சாம்பியன் போட்டிகளை தவிர்த்து, கடந்த எட்டு ஆண்டுகளில் நடைபெற்ற முக்கிய தனிநபர் ஓட்டப்போட்டிகள் அனைத்திலும் போல்ட் வெற்றிபெற்றிருக்கிறார்.  “என்றுமே பெயர் அழியாத புகழோடு ஓய்வுபெற இன்னும் இரண்டு தங்கப்பதக்கங்களை வெல்ல வேண்டியுள்ளது” என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கிறார்.

Related posts: