ஒரு ஓவரில் 7 சிக்ஸர்களை விளாசி உலக சாதனை படைத்த இலங்கையின் இளம் வீரர்
Saturday, December 16th, 2017
ஒரு ஓவரில் மட்டும் 7 சிக்ஸர்கள் விளாசி இலங்கையின் இளம் வீரர் ஒருவர் புதிய உலகசாதனை ஒன்றைப் படைத்துள்ளார். பலபிட்டிய,ரேவேத கல்லூரியின் நவிந்து பஹசரா என்ற 15 வயதுக்குட்பட்ட அணிக்காக விளையாடும் வீரரே இந்த சாதனை படைத்துள்ளார்.
முரளி நல்லிணக்க கிண்ண இறுதி போட்டியின் போதே இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது. இலங்கையின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முரளிதரன் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்திருந்தார்.
விவ்வியன் ரிச்சர்ட்ஸ் ,ரவி சாஸ்திரி ஆகியோர் முதல்தர கிரிக்கட் ,போட்டிகளிலும் யுவராஜ் சிங் சர்வதேச கிரிக்கட்டிலும் ஆறு சிக்ஸர்களை ஒரே ஓவரில் விளாசியுள்ளார்கள். முறையற்ற பந்து அடங்கலாக மொத்தமாக 7 சிக்ஸர்கள் விளாசி புதிய சரித்திரத்தை படைத்துள்ளார்
Related posts:
அமெரிக்க ஓபன் டென்னிஸ்: அதிர்ச்சி தோல்வியில் இருந்து தப்பினார் வாவ்ரிங்கா !
கோஹ்லியை பற்றி பேச வேண்டிய அவசியமில்லை -கும்ப்ளே
இலங்கை அணி பலமான நிலையில்!
|
|
|


