ஒருநாள் விக்கெட்டுக்கள் 100 இனை வீழ்த்தி சமி சாதனை!

நியூசிலாந்து அணியுடன் இடம்பெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் மார்டின் கப்டிலை வீழ்த்தி இந்திய வேகப்பந்து வீச்சாளர் முஹமட் சமி விரைவாக ஒருநாள் விக்கெட்டுக்கள் 100 இனை வீழ்த்திய வீரராக சாதனை படைத்துள்ளார்.
அதன்படி, ஒருநாள் போட்டிகள் 56 இல் சமி அவரது ஒருநாள் விக்கெட்கள் 100 இனை பூர்த்தி செய்துள்ளதோடு, இந்தியாவின் வேகமாக ஒருநாள் விக்கெட்டுக்கள் 100 இனை வீழ்த்திய வீரராக திகழ்ந்த வேகப்பந்து வீச்சாளர் இர்பான் பதான் 59 ஒருநாள் போட்டிகளில் விக்கெட்களை கைப்பற்றியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
அதன்படி, ஒருநாள் போட்டிகளில் வேகமாக விக்கெட்களை வீழ்த்திய பட்டியலில் சமி ஆறாவது இடத்தில் உள்ளார்.
இலங்கை சார்பில் சுழற் பந்து வீச்சாளர் அஜந்த மென்டிஸ் 63 போட்டிகளில் வேகமாக 100 விக்கெட்களை வீழ்த்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
உலக கட்டழகர் சாம்பியன் பட்டம் இலங்கையருக்கு!
இலங்கை பயிற்சியாளராக சமிந்த வாஸ்!
ஒருநாள் சர்வதேச அணிகளின் தரப்படுத்தலில் இங்கிலாந்து முதலிடம்!
|
|