இந்தியா 285 ஓட்டங்கள் முன்னிலையில்!

Saturday, August 13th, 2016

மேற்கிந்திய தீவுக்கு எதிரான 3வது டெஸ்டில் புவனேஷ்வரின் பந்துவிச்சில் மேற்கு இந்திய தீவுகள் அணி 225 ஓட்டங்களில் சுருண்டது.

இந்தியா- மேற்கு இந்திய தீவுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் செயின்ட் லூசியாவில் உள்ள கிராஸ் தீவின் டேரன் சமி தேசிய மைதானத்தில் ஆகஸ்ட் 9ம் திகதி தொடங்கியது. அஸ்வின், சாஹா ஆகியோரது சதம் கைகொடுக்க இந்திய அணி தமது முதல் இன்னிங்சில் 353 ஓட்டங்கள் குவித்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை துவக்கிய மேற்கு இந்திய தீவுகள் அணி 2வது நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 107 ஓட்டங்கள் எடுத்தது. 3வது நாள் ஆட்டம் மழையின் காரணமாக ரத்தானது.

இந்நிலையில் 4வது நாள் ஆட்டத்தில் மேற்கு இந்திய தீவுகள் அணி துவக்க வீரர் பரத்வைட்(64) அரைசதம் எடுத்து கைகொடுத்தார். பிராவோ 29 ஓட்டங்களிலும், சாமுவேல்ஸ் 48 ஓட்டங்களும் எடுத்து வெளியேறினர்.

உணவு இடைவேளைக்கு பின்னர் புவனேஷ்வர் வேகத்தில் ஆட்டம் கண்ட மேற்கு இந்திய தீவுகள் அணி 225 ஓட்டங்களுக்கு அனைத்து இலக்குகளையும் இழந்தது. இதில்  புவனேஷ்வர் குமார் 5 விக்கெட் வீழ்த்தினார். இதனையடுத்து தனது இரண்டாவது இன்னிங்சை துவங்கிய இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 157 ஓட்டங்கள் எடுத்துள்ளது. ராகுல்(28), தவான்(26), கோஹ்லி(4) ஓட்டங்களெடுத்து வெளியேறினர். தொடர்ந்து களமிறங்கிய ரஹானே அரை சதத்துடனும் ரோகித் ஷர்மா 41 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.நான்காவது நாள் ஆட்ட முடிவில் இந்தியா அணி 285 ஓட்டங்கள் முன்னிலை பெற்றுள்ளது.

Related posts: