ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை – இம்ரான் தாஹிர் முதலிடம்!

Sunday, February 12th, 2017

தென்னாபிரிக்கா – இலங்கை அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது.

நேற்று நடைபெற்ற கடைசி போட்டியிலும் தென்னாபிரிக்கா வெற்றி பெற்று தொடரை 5-0 எனக் கைப்பற்றியது.

இந்த வெற்றியின் மூலம் ஐ.சி.சி.யின் ஒருநாள் போட்டி அணிக்கான தரவரிசையில் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது. முதலிடத்தில் இருந்த அவுஸ்திரேலியாவை, தென்னாபிரிக்கா. 2 வது இடத்திற்கு பின் தள்ளியுள்ளது.

தென்னாபிரிக்கா 119 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.  அவுஸ்திரேலியா 118 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது.  நியூசிலாந்து 113 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும்,
இந்தியா 112 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும், இங்கிலாந்து 107 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும்,
இலங்கை 98 புள்ளிகளுடன் 6-வது இடத்திலும் உள்ளன.

பங்காளாதேஷ், பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள், ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே, அயர்லாந்து முறையே 7 வது இடத்தில் இருந்து 12-வது இடம்வரை பிடித்துள்ளன. பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் தென்னாபிரிக்கா அணியின் இம்ரான் தாஹிர் 761 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

நியூசிலாந்து வீரர் ட்ரென்ட் போல்ட் 757 புள்ளிகளுடன் 2-வது இடத்தை பிடித்துள்ளார்.
மேற்கிந்திய தீவுகள் வீரர் நரைன் 3-வது இடத்தை பிடித்துள்ளார்.  முதல் 10 இடத்திற்குள் இந்திய வீரர்கள் யாரும் இல்லை.  துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் டு பிளிசிஸ் 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

டி காக் 5-வது இடத்தையும், ஹசிம் அம்லா 6-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.  டி வில்லியர்ஸ் 2-வது இடத்தில் உள்ளார்.  தென்னாபிரிக்காவின் நான்கு வீரர்கள் முதல் 10 இடத்திற்குள் இடம்பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

F59815D2-5D41-48EA-8D12-A10815DE409F_L_styvpf

Related posts: