ஐசிசி ஒருநாள் விருதுகள்!

Friday, January 27th, 2023

ஐசிசி ஒருநாள் ஆட்டத்தில் ஆண்டின் சிறந்த வீரராக பாகிஸ்தான் கேப்டன் பாபா் ஆஸமும், சிறந்த வீராங்கனையாக இங்கிலாந்து துணை தலைவர் நடாலி ஷிவரும் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

சிறந்த வீராங்கனையாக தோ்வு செய்யப்பட்டுள்ள நடாலி ஷிவா் கடந்த 2022 இல் மட்டும் 2 சதங்கள், 5 அரைசதங்களை விளாசி உள்ளார்.

லாரா வொல்வா்ட்டுக்கு பின் மொத்தம் 833 ஓட்டங்களை பெற்றள்ளார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 91.43 ஆகும்.

ஆஸி. வீராங்கனைகள் அலிஸா ஹீலி, ரேச்சல் ஹெயின்ஸ் ஆகியோரை பின்னுக்கு தள்ளி இந்த விருதுக்கு தோ்வாகியுள்ளார். நடாலி. கடந்த ஒருநாள் உலகக் கோப்பையில் ஆஸி.க்கு எதிரான இறுதியில் 148 ஓட்டங்களை பெற்றிருந்தார் நடாலி.

அதேவேளை ஐசிசி ஆண்டின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரராக பாபா் ஆஸம் தொடா்ந்து இரண்டாவது முறையாக தோ்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் ஐசிசி சிறந்த வீரருக்கான சா் கேரி ஃபீல்ட் சோபா்ஸ் விருதையும் அவர் பெற்றுள்ளார்.

கடந்த 2022 இல் மொத்தம் 2598 ஓட்டங்களை பெற்றுள்ள அவர் சராசரி 54.12 ஆகும். அனைத்து விதமான கிரிக்கெட்டிலும் 2,000 ஓட்டங்களைக் கடந்த ஒரே வீரா் பாபா் ஆவார்.

8 சதம், 17 அரைசதங்கள் இதில் அடங்கும். ஒருநாள் ஆட்டத்தில் மட்டும் 9 ஆட்டங்களில் 679 ஓட்டங்களை பெற்றுள்ளார்.

டி20 உலகக் கிண்ண இறுதிக்கும் தனது அணியை அழைத்துச் சென்றறிரந்தார். 2022 ஐசிசி ஒருநாள் அணியின் தலைவராகவும் பாபா் தோ்வு செய்யப்பட்டார்

இதேவேளை ஐசிசி ஆண்டின் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரா் விருது இங்கிலாந்து தலைவர் பென் ஸ்டோக்ஸ்க்கு கிடைத்துள்ளது. தலைவராக நியமிக்கப்பட்ட பின் 10 டெஸ்ட்களில் 9 இல் வெற்றியை ஈட்டியுள்ளார்.

நியூஸி, தென்னாப்பிரிக்காவுடன் தொடா் வெற்றி, இந்தியாவுடன் ஒரே டெஸ்ட் வெற்றி, பாகிஸ்தானை 3 – 0 என ஒயிட்வாஷ் செய்தது இதில் அடங்கும்.

மேலும் 870 ஓட்டங்களை விளாசி, 26 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். ரிச்சா்ட் இல்லிங்வொர்த் (இங்கிலாந்து) சிறந்த நடுவராக தோ்வு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்ககது

000

Related posts: