ஸ்ரீசாந்த் மீதான தடையை நீடித்து நீதிமன்றம் உத்தரவு

Monday, November 6th, 2017

கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பான ஆயுள்கால தடையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வதாக இந்திய அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த் தெரிவித்துள்ளார்

2013-ம் ஆண்டு இடம்பெற்ற ஐ.பி.எல். தொடரின்போது ‘ஸ்பொட்பிக்சிங்’ சூதாட்டம் நடந்தமையை காவல்துறையினர் கண்டறிந்தனர்

இதனை அடுத்து  ஆட்ட நிர்ணய சூதாட்டத்தில் ஈடுபட்குற்றத்திற்காக ஸ்ரீசாந்த் மற்றும் அங்கீத் சவான் ஆகியோருக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை, ஆயுட்கால தடையை விதித்தது குறித்த சூதாட்ட வழக்கை விசாரித்த நீதிமன்றம் போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தினால் அவர்களை விடுதலை செய்தது

எனினும் இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபை அவர்களுக்கு விதித்த ஆயுட்கால தடையை நீக்கிக்கொள்ளவில்லை.

இதனை தொடர்ந்து ஸ்ரீசாந்த் இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபைக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்ததினை அடுத்து தடையை அகற்றக் கோரின கேரள மேல் நீதிமன்றம் உத்தரவிட்டது

இதனை எதிர்த்து இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை மேன்முறையீடு செய்ததின் பயனாக ஸ்ரீசாந்த் மீதான தடையை நீடித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில் ஆயுள் தடையை நீக்கக் கோரி இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபைக்கு எதிராக இந்திய உயர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்யவுள்ளதாக ஸ்ரீசாந்த் அறிவித்துள்ளார்.

Related posts: