பாகிஸ்தானின் இலக்கு 136 ஓட்டங்கள்!  

Monday, October 2nd, 2017

இலங்கைக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு, 136 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அபுதாபியில் கடந்த 28ஆம் திகதி ஆரம்பமான குறித்த இந்தப் போட்டியில், நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

இதன்படி, சந்திமால் 155 ஓட்டங்களையும் (ஆட்டமிழக்காமல்), திமுத் கருணாரத்ன 93 ஓட்டங்களையும், நிரோஷன் திக்வெல்ல 83 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

இதன்படி, இலங்கை அணி 419 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து, தனது முதல் இன்னிங்சை நிறைவு செய்தது.

இதனையடுத்து, துடுப்பெடுத்தாட ஆரம்பித்த பாகிஸ்தான் அணி, 422 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.

எனவே, மூன்று ஓட்டங்களால் பாகிஸ்தான் அணி முன்னிலையில் இருக்க, இலங்கை தனது இரண்டாவது இன்னிசை நேற்று(01) ஆரம்பித்தது.

எனினும், அந்த அணி சார்பில் எவரும் அரைச்சதம் கூட பெறாத நிலையில், வரிசையாக ஆட்டமிழக்க, 138 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளை இலங்கை சகல விக்கெட்டுக்களையும் இழந்துள்ளது.

Related posts: