எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 5 இலங்கை வீரர்கள்!

Wednesday, May 31st, 2017

சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் 1ஆம் திகதி இங்கிலாந்தில் தொடங்கவுள்ளது. சாம்பியன்ஸ் கிண்ணத்தை வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக இலங்கை அணியும் கிரிக்கெட் விமர்சகர்களால் பார்க்கப்படுகிறது.

அதிலும், இலங்கை அணியின் 5 முக்கிய வீரர்களின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. குசல் மெண்டீஸ் 22 வயதான குசல் மெண்டீஸ் வேகமாக வளர்ந்து வரும் வீரராக திகழ்கிறார். மெண்டீஸ் தான் பங்கேற்ற முதல் ஒருநாள் போட்டியிலேயே அரை சதம் அடித்து அசத்தியவர்.

ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான சமீபத்திய பயிற்சி ஆட்டத்தில் 74 ஓட்டங்களை குவித்த இவர் மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளார்.

அஞ்சலோ மத்யூஸ்  – ஆல்ரவுண்டரான ஏஞ்சலா மேத்யூஸ் இலங்கை அணியின் தலைவர் பொறுப்பை வகித்து வருகிறார். துடிப்புமிக்க வீரரான மேத்யூஸ் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் 95 ஓட்டங்களை குவித்துள்ளார்.
நீரோன் டிக்வெல்ல – இலங்கை அணியின் இடது கை ஓப்பனிங் பேட்ஸ்மேனான நீரோன் மொத்தமே 11 ஒருநாள் போட்டிகளில் தான் விளையாடியுள்ளார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் இரண்டு அரை சதம் அடித்த தெம்போடு, சாம்பியன்ஸ் கிண்ண போட்டியை எதிர்நோக்கியுள்ளார்.
லசித் மலிங்கா – எதிர் அணிகளுக்கு தனது அசுர வேக பந்துவீச்சின் மூலம் சிம்ம சொப்பனமாக விளங்கும் மலிங்கா தனது அனுபவத்தின் மூலம் சாம்பியன்ஸ் தொடரில் விக்கெட்களை அதிகளவில் வீழ்த்த காத்திருக்கிறார்.
லக்ஷன் சந்தானன் – இடது கை பந்துவீச்சாளரான சந்தானன் மொத்தமே 6 ஒருநாள் போட்டிகளில் விளையாடியிருந்தாலும், மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளார்.

சாம்பியன்ஸ் கிண்ணம் பயிற்சி போட்டிகளில் ஸ்காட்லாந்து அணிக்கு எதிராக 4 விக்கெட்களும், அவுஸ்ரேலியாவுக்கு எதிராக 2 விக்கெட்களும் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts: