மேத்யூஸ் – சந்திமல் குறித்தும் சங்காவிடமிருந்து விசேட கருத்து!

Monday, April 24th, 2017

இலங்கை கிரிக்கெட் அணியினது ஆட்ட முறையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.

நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் கிண்ண போட்டி குறித்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவ்வாறே மற்றைய நாடுகளுடன் போட்டியிடும் பொது பலம் பொருந்திய அணியாக நாம் மாற வேண்டுமாயின் முக்கிய சில மாற்றங்கள் அணியில் நடந்தாக வேண்டும் என அவர் மேலும் கூறியிருந்தார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்;

“அனுபவ ரீதியாக நமது அணிக்கு மேத்யூஸ் இருக்கிறார், சந்திமால் போன்றதொரு வீரர் இருக்கிறார். ஆனால்,பெரிதும் முன்னேற வேண்டியது திறமையால் மட்டுமல்ல. மனது நினைக்கும் விதத்திலும் தான்… உலகளாவிய ரீதியாக நோக்கின் நிறைய மாற்றங்களை உணரலாம், அது தான் யதார்த்தம். இங்கிலாந்து, தென்னாபிரிக்கா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளை நோக்கின் அவர்கள் ஒருநாள் போட்டிகளில் எதிர்பார்க்கா விதத்தில் புதிய தொனியில் களமிறங்குகின்றனர்… ”

“நான் நினைக்கிறேன் நாமும் அவ்வாறு செய்தால் நல்லதென்று, தற்போது நாம் விளையாடுவது ஒருவித கலாசார அடிப்படையில்… அது போட்டியின் வெற்றிக்கு இடமளிப்பது குறைவு.. எமக்கு வாய்ப்புக்களும் திறமைகளும் நிறையவே உண்டு. ஆனால் நாம் ஆடும் முறையினை மாற்ற வேண்டும்… அதிகளவு ரிஸ்க் எடுக்க வேண்டும், போட்டியின் வேகத்தினை மாற்ற வேண்டும், விக்கெட்களுடனான தொடர்பினை வேகப்பந்து மற்றும் சுழற்பந்து வீச்சாளர்கள் அதிகரித்துக் கொள்ள வேண்டும்..”

Related posts: