மலேசிய ஓபன்தொடரட: லின் டான் சாம்பியன்!

Tuesday, April 11th, 2017

மலேசிய ஓபன் பாட்மிண்டன் போட்டியில் சீனாவின் லின் டான் சாம்பியன் பட்டம் வென்றார். மலேசியாவின் குச்சிங் நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிச் சுற்றில் லின் டான் 21-19, 21-14 என்ற நேர் செட்களில் மலேசியாவின் லீ சாங் வெய்யை தோற்கடித்தார்.

முதல்முறையாக மலேசிய ஓபனில் சாம்பியன் பட்டம் வென்ற லின் டான், சர்வதேச அளவில் நடைபெறும் அனைத்து பெரிய போட்டிகளிலும் வாகை சூடியவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இந்தப் போட்டியில் லீ சாங் பட்டம் வெல்லவே அதிக வாய்ப்பிருப்பதாக நம்பப்பட்டது. அதற்கேற்றார் போல் முதல் செட்டில் லீ சாங்கும் அபாரமாக ஆடினார். முதல் செட்டில் அவர் 19-15 என்ற கணக்கில் முன்னிலை பெற்றார். இதனால் முதல் செட் அவர் வசமாகிவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திடீரென சரிவிலிருந்து மீண்ட லின் டான், தொடர்ச்சியாக 6 புள்ளிகளைப் பெற்று முதல் செட்டை 21-19 என்ற கணக்கில் கைப்பற்றினார். பின்னர் நடைபெற்ற 2-ஆவது செட்டை 21-14 என்ற கணக்கில் எளிதாக கைப்பற்றி வெற்றி கண்டார் லின் டான். வெற்றி குறித்துப் பேசிய லின் டான், மலேசிய ஓபனில் லின் டான் பட்டம் வெல்ல முடியாது என்ற கணிப்பை உடைக்க வேண்டும் என்பதே எனது முதல் இலக்காக இருந்தது. இப்போது அதை உடைத்துவிட்டேன். நாங்கள் இருவருமே நன்றாக ஆடினோம். உயர்தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினோம் என்றார்.

தோல்வி குறித்துப் பேசிய லீ சாங்,

நான் எனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. முதல் செட்டை இழந்த பிறகு நம்பிக்கையை இழந்தேன். அதேநேரத்தில் இந்தத் தொடரில் நான் விளையாடியவிதம் மனநிறைவு அளிக்கிறது என்றார். தாய் ஜு சாம்பியன்: மகளிர் இரட்டையர் பிரிவில் சீன தைபேவின் தாய் ஜு இங் சாம்பியன் பட்டம் வென்றார். அவர், தனது இறுதிச் சுற்றில் 23-25, 22-20, 21-13 என்ற செட் கணக்கில் ஸ்பெயினின் கரோலினா மரினை தோற்கடித்தார்.

Related posts: