ஊர்காவற்றுறை புனித அந்தோனியார் கல்லூரியின் சம்பியன் பட்டத்தை வென்றது பழைய மாணவர் அணி!

ஊர்காவற்றுறை புனித அந்தோனியார் கல்லூரியின் கல்லூரித் தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற கிரிக்கெட் போட்டியில் பழைய மாணவர்கள் அணி சம்பியனானது. முதலில் கல்லூரியில் கல்வி பயிலும் மாணவர்களுக்கும் பழைய மாணவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற கிரிக்கெட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பழைய மாணவர் அணி 8 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 75 ஓட்டங்கள் பெற்று கொண்டது.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய கல்லூரி மாணவர் அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 37 ஓட்டங்கள் மாத்திரம் எடுத்து தோல்வியை தழுவியது. தொடர்ந்து இடம்பெற்ற கல்லூரியின் பழைய மாணவர்களுக்கும் கல்லூரியின் ஆசிரியர்களுக்கும் இடம்பெற்ற கிரிக்கெட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆசிரியர் அணி 6 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 41 ஓட்டங்கள் எடுத்தது.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பழைய மாணவர் அணி விக்கெட் இழப்பின்றி 42 ஓட்டங்கள் எடுத்து வெற்றிபெற்று கல்லூரியின் இந்த ஆண்டின் கிரிக்கெட் சம்பியன் ஆனது பழைய மாணவர் அணி.
Related posts:
|
|