போலார்ட்டுக்கு அணியில் இடமில்லை!

Tuesday, October 9th, 2018

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய தீவு அணியின் முக்கிய வீரர்களான வெய்ன்பிராவோ, போல்லார்ட், சுனில் நரைன் ஆகிய 3 வீரர்கள் அணியில் இடம் பெறவில்லை.

மேற்கிந்திய தீவு கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

இரு அணிகள் இடையேயான 2 டெஸ்ட் போட்டித்தொடரில் ராஜ்கோட்டில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 272 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 2-வது டெஸ்ட் எதிர்வரும் 12-ம் திகதி ஹைராபாத்தில் தொடங்குகிறது.

இதைதொடர்ந்து இரு அணிகள் இடையே 5 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டி தொடரில் ஒருநாள் தொடர் 21ம் திகதி தொடங்குகிறது. ஒருநாள் தொடருக்கான 25 பேர் கொண்ட மேற்கிந்திய தீவு உத்தேச அணி அறிவிக்கப்பட்டது

வெய்ன்பிராவோ, போல்லார்ட், சுனில் நரைன் ஆகிய 3 வீரர்கள் அணியில் இடம் பெறவில்லை இதனால் அவர்களின் ஒரு நாள் போட்டி எதிர்காலம் இனி கேள்விக்குறியே. இதேபோல் 20 ஓவர் போட்டி அணியிலும் அவர்கள் இடம் பெறுவதற்கான வாய்ப்பு குறைவே.

இந்த 3 பேரும் 20 ஓவர் போட்டிக்கு ஏற்ற மிகச் சிறந்த வீரர்கள் ஆவார்கள். பிராவோவும் போல்லார்ட்டும் கரீபியன் பிரியர் லீக் போட்டியில் ஆடி வருகிறார்கள்.

மேற்கிந்திய தீவு கிரிக்கெட் சபைக்கும் பிராவோவுக்கும் ஏற்கனவே ஊதிய விவகாரத்தில் பிரச்சினை இருந்து வருகிறது. அவர் ஒரு நாள் போட்டி அணியில் விளையாடி 4 ஆண்டுகளும், 20 ஓவர் போட்டிகளில் விளையாடி 2 ஆண்டுகளும் ஆகிறது. ஒரு நாள் தொடருக்கான 15 பேர் கொண்ட மேற்கிந்திய தீவு அணி விரைவில் அறிவிக்கப்படும்.

Related posts: