ஊக்கமருந்து விசாரணையில் வெற்றி: ஒலிம்பிக்கில் களம் இறங்குகிறார் நார்சிங்..!

Tuesday, August 2nd, 2016

ஊக்க மருந்து புகாரில் சிக்கிய இந்திய வீரர் நார்சிங் யாதவ் மீதான குற்றச்சாட்டில் உண்மையில்லை என்று அவரை குற்றச்சாட்டிலிருந்து விடுவித்திருக்கிறது தேசிய ஊக்கமருந்து தடுப்பு ஆணையம். இதையடுத்து அவர் ஒலிம்பிக் விளையாட்டில் பங்கேற்பதில் இருந்த தடை நீங்கியிருக்கிறது.

இருப்பது தெரியாமலேயே நார்சிங் உணவை உட்கொண்டுள்ளார். அவர் மீது எந்த தவறும் இல்லை. அவரை ஒலிம்பிக்கில் அனுமதிக்கலாம் என்று  தேசிய ஊக்கமருந்து தடுப்பு ஆணையம் கூறியுள்ளது.

பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் அடுத்தமாதம் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளன. இந்தத் தொடரில் இந்தியா சார்பில் 120 வீரர்கள் பங்கேற்க உள்ளனர். முன்னதாக இந்த தொடரில் ஆண்கள் 74 கிலோ எடை பிரிவு மல்யுத்த போட்டியில் பங்கேற்க இந்திய வீரர் நார்சிங் யாதவ் தகுதி பெற்றிருந்தார். ஆனால், தேசிய ஊக்கமருந்து தடுப்புக் கழகம் சார்பில் நடத்தப்பட்ட ரத்தப் பரிசோதனையில், அவர் தடை செய்யப்பட்ட ஸ்டீராய்டு மருந்து உட்கொண்டது கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நார்சிங் யாதவ் ஊக்க மருந்து பயன்படுத்தியதால் ஒலிம்பிக்கில் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டது. அவருக்கு பதிலாக பிரவீன் ராணா ஒலிம்பிக்கில் கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டது.

இதனிடையே, நார்சிங் யாதவை திட்டமிட்டு சிக்க வைக்கும் விதமாக அவரது உணவில் ஊக்க மருந்து கலக்கப்பட்டது தெரிய வந்தது. சோனிபட்டில் உள்ள இந்திய விளையாட்டு ஆணைய மையத்தில் அவரது உணவில் ஊக்க மருந்து கலக்கப்பட்டதாக இந்திய மல்யுத்த சங்க தலைவர் பிரிவூபூசன் சரண் சிங் தெரிவித்திருந்தார்.

Related posts: