ஒலிம்பிக் திட்டமிட்டபடி நடக்கும்; ஒலிம்பிக் சபைத் துணைத் தலைவர் நம்பிக்கை!

Monday, May 10th, 2021

உலகின் மிகப்பெரிய விளையாட்டு நிகழ்வான ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த ஆண்டு நடக்க ஏற்பாடாகியிருந்த நிலையில், கொரோனா அச்சத்தால் தள்ளிவைக்கப்பட்டு வருகிற ஜூலை 23 முதல் முதல் ஓகஸ்ட் 8 வரை நடைபெறவிருக்கிறது.

ஆனால், மறுபடியும் கொரோனா பரவல் உச்சத்தை எட்டியிருப்பதால் ஒலிம்பிக் போட்டி திட்டமிட்டபடி நடக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் சர்வதேச ஒலிம்பிக் சபையின் துணைத் தலைவரும், அவுஸ்ரேலிய ஒலிம்பிக் குழுத் தலைவருமான ஜான் கோயட்சிடம், தற்போதைய சூழலில் ஒலிம்பிக் போட்டி தள்ளிவைக்கப்படவோ அல்லது ரத்தாகவோ வாய்ப்பு உள்ளதா என்று கேட்கப்பட்டபோது, ‘இல்லை, அதற்கு வாய்ப்பே இல்லை’ என்று உறுதிபடக் கூறியுள்ளார்.

‘எல்லாவிதமான கொரோனா தடுப்பு பாதுகாப்பு அம்சங்களையும் மேற்கொள்ள நாங்கள் ஜப்பான் அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். எல்லாம் சரியாக நடைபெற்றுவருகிறது. கொரோனா தடுப்புக்கு தேவையான நடவடிக்கைகளை செயல்படுத்துவோம். இங்கு தடுப்பூசி தேவை இருக்காது என்று அவர்கள் கணித்துள்ளனர். நிலைமையில் தற்போது முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. ஒலிம்பிக் திட்டமிட்டபடி நடக்கும்’ என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

00

Related posts: