நியூசிலாந்தில் நிலநடுக்கம்: தலைதெறிக்க ஓடிய பாகிஸ்தான் வீரர்கள்!
Tuesday, November 15th, 2016
நியூசிலாந்தில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் அங்கிருந்த பாகிஸ்தான் வீரர்கள் பீதியில் உறைந்துள்ளனர்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக நியூசிலாந்து சென்றுள்ளது. இவ்விரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி எதிர்வருகிற 17ம் திகதி கிறிஸ்ட்சர்ச்சில் தொடங்குகிறது.
இந்நிலையில் நியூசிலாந்தில் உள்ள கிறிஸ்ட்சர்ச் நகரில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 7.5 ஆக ரிக்டர் அளவுகோலில் இது பதிவாகி இருந்தது.இதைத் தொடர்ந்து ஹொட்டலில் 7வது மாடியில் தங்கி இருந்த பாகிஸ்தான் வீரர்கள் ஓட்டலில் இருந்து தலைதெறிக்க வெளியே ஓடி வந்தனர். நியூசிலாந்தில் உள்ள பாகிஸ்தான் வீரர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.

Related posts:
முரளிதரன் பந்தை சமாளிக்க கஷ்டப் பட்டேன்! - கில்கிறிஸ்ட்
மிட்செல் ஜான்சனை விட பயங்கரமானவர்கள் : இப்படிக் கூறுகிறார் ஸ்டீவ் ஸ்மித் !
வீரர்களை தெரிவு செய்வது வெற்றிக்கு காரணம் - ஊடக சந்திப்பில் சந்திக்க!
|
|
|


