வீரர்களை தெரிவு செய்வது வெற்றிக்கு காரணம் – ஊடக சந்திப்பில் சந்திக்க!

Saturday, December 23rd, 2017

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக நேற்று முந்தினம் பதவியேற்ற சந்திக்க ஹத்துருசிங்க, இலங்கை கிரிக்கட் சபையால் ஒழுங்குபடுத்தப்பட்ட உத்தியோகபூர்வ ஊடக சந்திப்பில் பல விடையங்களை தெரிவித்துள்ளார்.

இலங்கை அணியின் நெருக்கடி நிலைமையில் இருந்து அணியை மீட்டு வெற்றியின் பாதையில் பயணிக்க செய்ய தன்னாலான முழுமுயற்சியையும் மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.வீரர்களை அணியில் தொடர்ச்சியாக தேர்வு செய்வதும், சரியான சேர்க்கையும் ஒரு அணியின் பிரதானமான வெற்றிகளுக்கு காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த வருடத்தில் இலங்கை அணி பங்கேற்ற 28 ஒருநாள் போட்டிகளில் 5 இல் மட்டுமே வெற்றியை பெற்றது, அத்தோடு 8 டெஸ்ட் போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது.இலங்கை அணியை இந்தாண்டில் மொத்தமாக 7 தலைவர்கள் அணியைவழிநடாத்தியுள்ளனர்.இப்படியான நிலைமைகள் கடந்து அணியை வெற்றியின் பாதையில் அழைத்துச்செல்ல முடியும் என்றும் அவர் நம்பிக்கையை வெளியிட்டுள்ளார்.

மேலும் பங்களாதேஸ் அணியை வழிநடாத்த கையாண்ட யுக்தியை பிரயோகிக்க போவதாகவும், குறுகிய காலத்தில் மீள் எழுச்சி பெற வைக்க தன்னாலான அனைத்து முயற்சிகளையும் நல்குவதாகவும் தெரிவித்தார். இலங்கை கிரிக்கட் வரலாற்றில் அதிக சம்பளம் பெறப்போகும் முதலாவது பயிற்றுவிப்பாளர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. தனது பயிற்றுவிப்பின் கீழ் முழுமையான தொடரை பங்களாதேஸ் அணிக்காக ஆரம்பிக்கவுள்ளார்.

Related posts: