காலிறுதிக்குச் சென்றது ஸ்கந்தவரோதய அணி!

Saturday, March 24th, 2018

இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கம் நடத்தும் 19 வயதுக்கு உட்பட்ட அணிகளுக்கு இடையிலான துடுப்பாட்டத் தொடரில் சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரி அணி காலிறுதிக்குத் தகுதி பெற்றது.

சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரி மைதானத்தில் அண்மையில் நடைபெற்ற ஆட்டத்தில் சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரி அணியை எதிர்த்து தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி அணி மோதியது. முதலில் துடுப்பெடுத்தாடிய தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி அணி 26.5 பந்துப் பரிமாற்றங்களில் சகல இலக்குகளையும் இழந்து 81 ஓட்டங்களைப் பெற்றது. அதிகபட்சமாக பகீரதன் 24 ஓட்டங்களையும் சுஜன் 10 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் டென்சன் 3 இலக்குகளையும் தனுசன், பிரசன், சோபிகன் ஆகியோர் தலா இரண்டு இலக்குகளையும் அஜிதன் ஓர் இலக்கையும் கைப்பற்றினர்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரி அணி 14.1 பந்துப் பரிமாற்றங்களில் 3 இலக்குகளை மாத்திரம் இழந்து 85 ஓட்டங்களைப் பெற்று 7 இலக்குகளால் வெற்றிபெற்று காலிறுதிக்குத் தகுதி பெற்றது. அதிகபட்சமாக பிரசாந் 30 ஓட்டங்களையும் நிகர்ஜன், அஜிந்தன், தனுசன் ஆகியோர் தலா 9 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் சுஜன் 2 இலக்குகளையும் தயூரன் ஓர் இலக்கையும் கைப்பற்றினர்.

Related posts: