ஏமாற்றம் அடைந்த இந்திய அணி!

Thursday, August 4th, 2016

இந்தியா, மேற்கிந்திய தீவு அணிகள் மோதிய இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜமைக்காவில் நடைபெற்றது. இதில் முதல் இன்னிங்ஸில் மேற்கிந்திய தீவு அணி 196 ஓட்டங்களும், இந்திய அணி 500 ஓட்டங்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

அடுத்து இரண்டாவது இன்னிங்ஸ் ஆடிய மேற்கிந்திய தீவு அணி 4 விக்கெட் இழப்பிற்கு, 48 ஓட்டங்கள் எடுத்த போது மழை குறுக்கிட்டதால் நான்காம் நாள் ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது.

ஐந்தாம் நாள் மற்றும் கடைசி நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. மேற்கிந்தைய தீவு அணியின் துடுப்பாட்டக்காரர்கள் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர்.

இதனால் இந்திய பந்து வீச்சாளர்கள் என்ன முயற்சி செய்தும் பலன் கிடைக்கவில்லை.பொறுப்பாக ஆடிய பிளாக்வுட் 63 ஓட்டங்கள் எடுத்து அஸ்வின் சுழலில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்து ஆடிய டவ்ரிச் தன் பங்கிற்கு 74 ஓட்டங்கள் எடுத்து மிஸ்ரா சுழலில் ஆட்டமிழந்தார்.

மேற்கிந்திய அணியின் தலைவர் ஹொல்டர், சேஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர். இதனால் மேற்கிந்திய தீவு அணி 6 விக்கெட் இழப்பிற்கு 388 ஓட்டங்கள் எடுத்த போது ஆட்டத்தை முடித்து கொள்வதாக இரு அணி தலைவர்களும் ஒப்புகொண்டனர்.

மேற்கிந்திய தீவு அணியை தோல்வியில் இருந்து காப்பாற்றிய சேஸ் 137 ஓட்டஙகள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இவருக்கு இணையாக ஈடு கொடுத்து ஆடிய மேற்கிந்திய தீவு அணியின் தலைவர் ஹோல்டர் 64 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் 5 ஆம் நாள் ஆட்டத்தில் 88.1 ஓவர்கள் வீசி 2 விக்கெட்டுகள் மட்டும் வீழ்த்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்விரு அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி வரும் ஆகஸ்ட் 9 ம் திகதி லூசிய மைதானத்தில் நடைபெறுகிறது.

Related posts: