14ஆவது பட்டத்தை வென்ற சானியா இணை!

Tuesday, May 17th, 2016

ரோம் நகரில் நடை­பெற்ற இத்­தாலி ஓபன் டென்­னிஸில் செரீனா வில்­லியம்ஸ் சம்பியன் பட்டம் வென்றார். பெண்கள் இரட்­டையர் பிரிவில் சானியா- –ஹிங் கிஸ் ஜோடி வெற்றி பெற்று 14ஆ-வது பட்­டத்தை ருசித்தது.

பெண்கள் இரட்­டையர் பிரிவில் சானியா மிர்ஷா –ஹிங்கிஸ் ஜோடி, மகரோவா வெஸ்னினா ஜோடியை எதிர்­கொண்­டது. இதன் முதல் செட்டை சானியா ஜோடி 6–-1 என எளிதில் கைப்­பற்­றி­யது. ஆனால், எதிர்­ஜோடி 2ஆ-வது செட் டில் சுதாகரித்துக்கொண்டு விளை­யா­டி­யது. இதனால் சானியா ஜோடி அந்த செட்டை 6–-7 என இழந்­தது.

ஆனால், வெற்றி ஜோடியான சானியா- – ஹிங்கிஸ் ஜோடி 3ஆ-வது செட்டில் சிறப்­பாக விளை­யாடி அந்த செட்டை 10–-3 எனக் கைப்பற்­றி­யது. இதன்­மூலம் சானியா ஹிங்கிஸ் ஜோடி 14-ஆவது பட்டத்தை வென்றுள்ளது.

Related posts: