தொடரை வெல்லுமா இந்திய அணி?

Wednesday, October 26th, 2016

இந்தியாவுக்கு வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது.இதில் தர்மசாலாவில் நடந்த முதலாவது ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்திலும், மொகாலியில் நடந்த 3–வது ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்றது.

டெல்லியில் நடந்த 2–வது ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. இதையடுத்து தொடரில் இந்தியா 2–1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா–நியூசிலாந்து இடையிலான 4–வது ஒரு நாள் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பகல்–இரவு மோதலாக இன்று (புதன்கிழமை) நடக்கிறது. இன்றைய ஆட்டத்திலும் வாகை சூடி தொடரை கைப்பற்றும் நோக்குடன் இந்திய வீரர்கள் வியூகங்களை தீட்டியுள்ளனர்.

அதே போன்று நியூசிலாந்து வீரர்களும் இந்தியாவிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பலத்துடன் களமிறங்கவுள்ளனர்.

அணி விவரம்

இந்தியா: ரோகித் சர்மா, ரஹானே, விராட் கோலி, மனிஷ் பாண்டே, டோனி (கேப்டன்), கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்ட்யா, அக்ஷர் பட்டேல் அல்லது ஜெயந்த் யாதவ், அமித் மிஸ்ரா, உமேஷ் யாதவ் அல்லது தவால் குல்கர்னி, ஜஸ்பிரித் பும்ரா.

நியூசிலாந்து: மார்ட்டின் கப்தில், டாம் லாதம், வில்லியம்சன் (கேப்டன்), ராஸ் டெய்லர், கோரி ஆண்டர்சன், லுக் ரோஞ்ச் அல்லது வாட்லிங், மிட்செல் சான்ட்னெர், ஜேம்ஸ் நீஷம், மேட் ஹென்றி, டிம் சவுதி, டிரென்ட் பவுல்ட்.

indiavsnewzealandlivestream12092016-big

Related posts: