57 ஸிக்ஸர்கள், 27 பவுண்டரிகளுடன் ஒரு நாள் ஆட்டத்தில் 490 ஓட்டங்கள் – தென்னாபிரிக்க வீரர் சாதனை!

Tuesday, November 21st, 2017

தென்னாபிரிக்காவைச் சேர்நத ஷேன் டேட்ஸ்வெல் ஒருநாள் போட்டியில் அதிரடியாக விளையாடி 490 ஓட்டங்கள் எடுத்து சாதனை புரிந்துள்ளார்.

தென்னாபிரிக்காவில் உள்ளு+ர் அணிகளுக்கு இடையே கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அங்குள்ள நோர்த் வெஸ்ட் யுனிவர்சிடி புக்கே அணிக்கும், போட்ச் டார்ப் அணிக்கும் இடையே நேற்று முன்தினம் ஒருநாள் போட்டி நடைபெற்றது. முதலில் விளையாடிய நோர்த் வெஸ்ட் அணி வீரர்கள் சிறப்பாக விளையாடினர்.

குறிப்பாக, அந்த அணியைச் சேர்ந்த ஷேன் டேட்ஸ்வெல் அதிரடியாக விளையாடினார். தொடக்கத்தில் இருந்தே பந்துகளை மைதானம் முழுக்க பறக்கவிட்டார்.

இறுதியில், 151 பந்துகளில் 57 சிக்ஸர்கள் மற்றும் 27 பவுண்டரிகளுடன் 490 ஓட்டங்கள் எடுத்தார். அவருடன் வி ளையாடிய மற்றுமொரு வீரர் ருவான் ஹால்புருக் 54 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகளுடன் 104 ஓட்டங்கள் எடுத்தார். இறுதியில் அந்த அணி 50 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 677 ஓட்டங்கள் எடுத்தது.

Related posts: