உலகக்கிண்ண T-20 இறுதிப் போட்டி: நடுவர்களாக இலங்கையர் இருவர்!
Saturday, April 2nd, 2016
உலகக்கிண்ண T20 இறுதிப் போட்டி நாளை கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இடம்பெறவுள்ளது. இந்தப் போட்டியில் இங்கிலாந்தும் மேற்கிந்தியத்தீவுகள் அணியும் மோதுகின்றன.
இதற்கான நடுவர்களின் பெயர்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. கள நடுவர்களாக குமார் தர்மசேன (இலங்கை), ராட் டக்கர் ஆகியோரும் 3 ஆவது நடுவராக மராய்ஸ் எராமசும் பணியாற்றவுள்ளார்கள். ப்ரூஸ் ஆஸ்சன்போர்ட் 4 ஆவது நடுவராகப் பணியாற்றவுள்ளார்.
ரஞ்சன் மதுகல்ல (இலங்கை) போட்டி ரெஃப்ரியாகப் பணியாற்றுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
வடக்கின் மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு விழா!
கட்டணம் உயர்வு நிறுத்த - அணி உரிமையாளர்கள் !
இந்தியன் ப்ரீமியர் லீக் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை சாதனையுடன் வென்ற பஞ்சாப் கிங்ஸ்!
|
|
|


