வடக்கு – கிழக்கு மாகாணங்களிலும் விளையாட்டுத்துறையில் மறுமலர்ச்சி – பிரதமர்!
Sunday, September 24th, 2017
வடக்கு – கிழக்கு மாகாணங்களிலும் விளையாட்டுத்துறையில் மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
மாத்தறை கொட்டவில விளையாட்டரங்களில் நேற்று பிற்பகல் ஆரம்பமான 43 ஆவது தேசிய விளையாட்டு விழாவின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார். பிரதமர் தொடர்ந்து உரையாற்றுகையில் , விளையாட்டை வலுப்படுத்துவதன் மூலம் நாட்டின் தனித்துவ அடையாளத்தை கட்டியெழுப்ப முடியும் என்று பிரதமர் சுட்டிக்காட்டினார்.
விளையாட்டுக்கு இன, மத பேதங்கள் கிடையாது. இலங்கையில் விளையாட்டுத் துறையை அபிவிருத்தி செய்வதற்காக அரச மட்டத்தில் உயர்ந்தபட்ச ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று பிரதமர் உறுதியளித்தார். நாடு முழுவதும் விளையாட்டு அபிவிருத்திக்கான வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்பட இருக்கிறது என்றும் பிரதமர் தெரிவித்தார்.
Related posts:
நரம்புத் தளர்ச்சி நோயால் பாதிக்கப்பட்ட கால்பந்து வீரருக்கு ரொனால்டோ கொடுத்த கௌரவம்!
குல்தீப் யாதவை தேர்ந்தேடுத்ததற்கு பதில் அளித்த விராட் கோஹ்லி!
ஆவேசமான முன்னாள் அணித்தலைவர் கிளார்க்!
|
|
|


