குல்தீப் யாதவை தேர்ந்தேடுத்ததற்கு பதில் அளித்த விராட் கோஹ்லி!

Thursday, February 9th, 2017

வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கு சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவை ஏன் தேர்ந்தேடுத்தோம் என்று விராட் கோஹ்லி விளக்கமளித்துள்ளார்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இப்போட்டி வரும் 9 ஆம் திகதி ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ்காந்தி மைதானத்தில் நடை பெற உள்ளது.

இதற்கான இந்திய அணி வீரர்களின் பெயர்கள் அண்மையில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இப்போட்டிக்கான டெஸ்ட் அணியில் இளம் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் தெரிவு செய்யப்பட்டார். இதில் அனுபவ பந்து வீச்சாளர் மிஸ்ரா இருக்கையில், இவர் எப்படி தெரிவு செய்யப்பட்டார் என்று கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி கூறுகையில், இந்திய அணிக்கு ஒரு புதிய வரவு குல்தீப். இவர் உள்ளூர் போட்டிகளில் நடக்கும் தொடர்களில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். ஒரு வீரர் சிறப்பாக செயல்படும் போது அவர் தேசிய அணிக்கு தெரிவு செய்யப்படுவது ஒன்றும் ஆச்சரியம் இல்லை. அதுமட்டுமின்றி இங்கிலாந்து அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் அவரின் பந்து வீச்சு அற்புதமாக இருந்தது. அமித் மிஸ்ரா ஒரு சிறப்பான பந்து வீச்சாளர், அவர் தற்போது காயம் காரணமாக விலகியுள்ளார்.

என்னால் புரிந்து கொள்ள முடிகிறது அனுபவம் தான் சிறந்தது, இருப்பினும் தொடருக்கு நான்கு சுழற்பந்து வீச்சாளர்கள் தேவை அதன் காரணமாக குல்தீப் தெரிவு செய்யப்பட்டுள்ளார். மேலும் குல்தீப் சிறப்பாக செயல்பட்டு தன்னுடைய தெரிவை நியாயப்படுத்துவார் என்று கூறியுள்ளார்

 news_02-02-2016_42holi

Related posts: