கட்டணம் உயர்வு நிறுத்த – அணி உரிமையாளர்கள் !

Wednesday, March 11th, 2020

ஐ.பி.எல் போட்டி நடத்துவதற்கான கட்டண உயர்வை நிறுத்தி வைக்க வேண்டும் என ஐ.பி.எல் நிர்வாகத்துக்கு அணி உரிமையாளர்கள் கடிதம் அணிப்பியுள்ளதாக கூறப்படுகின்றன.

8 அணிகள் பங்கேற்கும் 13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டித்தொடர் எதிர்வரும் 29-ஆம் திகதி ஆம்பமாகிறது.

ஐ.பி.எல். போட்டிக்கான பரிசுத்தொகையை இந்திய கிரிக்கெட் சபை பாதியாக குறைத்தது. கடந்த ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற அணிக்கு 20 கோடி வழங்கப்பட்டதுடன், இந்த ஆண்டு பரிசுத்தொகை ரூ.10 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல் 2-வது இடத்தை பிடிக்கும் அணிக்கான பரிசுத்தொகை ரூ.12.5 கோடியில் இருந்து ரூ.6ரு கோடியாக குறைத்துள்ளது.

இதேபோல் 3-வது மற்றும் 4-வது இடத்தை பிடித்த அணிகளுக்கு கடந்த ஆண்டு தலா 8ž கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டதுடன், இந்த தொகையை இந்த ஆண்டு தலா ரூ.4 கோடியே 37 லட்சமாக குறைத்துள்ளது.

மேலும் ஐ.பி.எல். ஆட்டத்தை நடத்துவதற்கு மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு அணியின் உரிமையாளர்கள் ரூ.30 லட்சம் வழங்க வேண்டும் என்ற தொகையை ரூ.50 லட்சமாக கிரிக்கெட் சபை உயர்த்தியுள்ளது.

பரிசுத்தொகை குறைப்பு, போட்டி நடத்துவதற்கான கட்டண உயர்வு ஆகியவற்றால் ஐ.பி.எல்.அணி உரிமையாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இதுதொடர்பாக விரைவில் ஆலோசனை நடத்த இருப்பதாக அணி உரிமையாளர்களில் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Related posts: