உலகக்கிண்ணத் தொடருக்கு இலங்கை தகுதி!
Wednesday, September 20th, 2017
இந்திய அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிய போது இந்திய அணி தொடரை முழுமையாக வென்றது, இதனால் இலங்கை அணி உலகக்கிண்ணத் தொடருக்கு நேரடியாக தகுதி பெறுவது சிக்கல் என்று கூறப்பட்டடுள்ளது.
ஏனெனில் முதல் எட்டு இடங்களில் இருக்கும் அணிகளே உலகக்கிண்ணத் தொடருக்கு தகுதி பெறும், அந்த வகையில் இந்தியாவுடன், இலங்கை அணி தோற்றதால் புள்ளிப் பட்டியலில் இலங்கை அணி பின்னுக்குச் சென்றது. அதுமட்டுமின்றி மேற்கிந்திய தீவு அணி, இங்கிலாந்து அணியுடன் மோதும் ஒருநாள் போட்டி தொடரைக் கொண்டு முடிவு மாறலாம் என்று கூறப்பட்டது.
இந்நிலையில் இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவு அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.இதனால் இலங்கை அணி உலகக்கிண்ணத் தொடருக்கு தகதி பெறுவதற்கு வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.தொடர்ந்து இங்கிலாந்து அணியுடன் மோதும் மேற்கிந்திய தீவு அணி தொடரை முழுமையாக இழக்கும் பட்சத்தில், இலங்கை அணி தகுதி பெறலாம் என்றும் மேற்கிந்திய தீவு அணி தற்போது 78 புள்ளிகளுடன் 9-வது இடத்திலும், இலங்கை அணி 86 புள்ளிகளுடன் 8-வது இடத்திலும் உள்ளது.மேலும் மேற்கிந்திய தீவு அணி முதல் போட்டியில் இங்கிலாந்து அணியுடன் தோல்வியை சந்தித்துவிட்டதால், இனி மேற்கிந்திய தீவு அணி, தரவரிசைப்பட்டியலில் இலங்கை அணியை பின்னுக்கு தள்ள முடியாது என்றும் இலங்கை அணி உலகக்கிண்ணத்தொடருக்கு நேரடியாக தகுதி பெறுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது எனவும் கூறப்படுகிறது
Related posts:
|
|
|


