கோலி சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேனாக உருவெடுக்க சில ஆண்டுகள் ஆகும் – ரிக்கி பொண்டிங்!

Thursday, February 9th, 2017

இந்திய அணித் தலைவர் விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் உலகின் சிறந்த துடுப்பாட்டவீரர் ஆவார். ஆனால், டெஸ்ட் போட்டிகளில் அவர் திறமையான துடுப்பாட்ட வீரர் என்று கூறுவதற்கு இன்னும் காலம் இருக்கிறது’ என ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பொண்டிங் கூறியுள்ளார்.

இதுகுறித்து,கூறியுள்ளதாவது:
ஒருநாள் போட்டிகளில் கோலி உலகின் சிறந்த பேட்ஸ்மேனா என்று கேட்டால், “ஆம்’ என்றுதான் கூறுவேன். கடந்த 6 முதல் 7 மாதங்களுக்கு முன்பிருந்து அவர் முற்றிலும் வித்தியாசமாக, சிறப்பாக விளையாடி வருகிறார். ஒருநாள் போட்டிகளில் அவரது செயல்பாடு மிகச் சிறப்பானதாக உள்ளது. அதில் இதுவரை 27 சதங்கள் அடித்துள்ளார். ஒருநாள், டெஸ்ட், டி20 என அனைத்து விதமான போட்டிகளுக்கும் அணிக்கு தலைமை வகிப்பது, அவரது திறமையை மேலும் மேம்படுத்தும்.
அதேவேளையில், டெஸ்ட் போட்டிகளில் சிறப்பான பேட்ஸ்மேனாக உருவெடுப்பதற்கு அவருக்கு இன்னும் சில ஆண்டுகள் ஆகலாம். 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய சச்சின் டெண்டுல்கர், நூற்றுக்கும் மேற்பட் டெஸ்ட்களில் களம் கண்ட பிரையன் லாரா, ஜேக் காலிஸ் ஆகியோரையே ஜாம்பவான்களாக நாம் குறிப்பிடுகிறோம். கோலி, அந்த எண்ணிக்கையில் இன்னும் பாதியளவு கூட விளையாடவில்லை. எனவே, டெஸ்ட் போட்டிகளின் சிறப்பான பேட்ஸ்மேன்களில் ஒருவராக அவரை இப்போது குறிப்பிடுவது முதிர்ச்சியற்றதாக இருக்கும்.

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கோலியை, அவருக்கு சாதகமான சூழ்நிலையில் இருந்து வெளியே கொண்டு வருவது தான் ஆஸ்திரேலிய அணியினருக்கு இருக்கும் முக்கியமாக பணி. அப்போது தான் அந்தத் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு சிறப்பான வாய்ப்புகள் கிடைக்கும். கோலி ஆக்ரோஷமானவராக மாறும்போது, அது அவருக்கு சாதகமானதாகவோ, இல்லை எதிரணிக்கு சாதகமானதாகவோ அமையலாம். கோலி போன்ற வீரர்கள் விளையாடும்போது அவர் ரன் எடுக்கும் திசைகளை அறிந்து, பவுண்டரி வாய்ப்புகளை கட்டுப்படுத்த வேண்டும். இந்தியாவில் விளையாடுவதைப் பொருத்த வரையில், இந்திய அணி வெற்றியை நோக்கியே நகரும். அதை தடுக்கவும், நிறுத்தவும் மட்டுமே நாம் முயற்சிக்க வேண்டும் என்று ரிக்கி பாண்டிங் கூறினார்.

Former-Australian-cricket-capatin-Ricky-Ponting-R-is-seen-with-Rod-Pampling1-720x480

Related posts: