இலங்கை குழுவிற்கு முழுமையான விளக்கம் –  பாகிஸ்தான்!

Wednesday, October 25th, 2017

லாஹுரில் நடைபெறவுள்ள இலங்கை   பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 20க்கு20 கிரிக்கட் போட்டிக்கான பாதுகாப்பு ஒழுங்குகளை ஆராய்வதற்காக இலங்கையின் குழு ஒன்று அங்கு சென்றுள்ளது.

இந்த குழுவிற்கு குறித்த போட்டிக்கான பாதுகாப்பு ஒழுங்குகள் தொடர்பில் முழுமையான விளக்கம் வழங்கப்படும் என்று பாகிஸ்தானிய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

2009ம் ஆண்டு இலங்கை கிரிக்கட் அணியின் மீது நடத்தப்பட்ட தாக்குதலை அடுத்து சிம்பாப்வேயைத் தவிர வேறு எந்த சர்வதேச அணிகளும் பாகிஸ்தான் சென்று கிரிக்கட் போட்டிகளில் பங்கேற்றிருக்கவில்லை.இறுதியாக உலக 11வர் அணி அங்கு சென்று விளையாடி இருந்தநிலையில், தற்போது இலங்கை கிரிக்கட் அணியை மீண்டும் அங்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.இதற்கு இலங்கையின் முன்னிலை கிரிக்கட் வீரர்கள் எதிர்ப்பை தெரிவித்திருப்பதுடன், பலர் அந்த போட்டியில் இருந்து விலகியுள்ளனர்.இந்தநிலையில் திசர பெரேரா தலைமையிலான அணி இந்த தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், போட்டிக்கும் இலங்கை அணிக்கும் வழங்கப்படவுள்ள பாதுகாப்பு குறித்த முன்னேற்பாடுகளை இலங்கை குழு ஆய்வு செய்யவுள்ளது.இந்த போட்டி எதிர்வரும் 29ம் திகதி லாஹுரில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: