கிரிக்கட் நாடுகளிடம் வேண்டுகோள் விடுத்தது சர்வதேச கிரிக்கட் பேரவை!

Friday, December 14th, 2018

கிரிக்கட்டில் இடம்பெறுகின்ற ஆட்ட நிர்ணய சதியை குற்றவியல் சட்டத்தின் கீழ் கொண்டுவருவதற்கு சர்வதேச கிரிக்கட் பேரவை, கிரிக்கட் விளையாடப்படும் நாடுகளைக் கோரி வருகிறது.

இதற்கு கிரிக்கட் விளையாடும் நாடுகளின் அரசாங்கங்களது ஒத்துழைப்பை கோரி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபடுகின்ற ஆட்கள், உலக நாடுகளுக்கு சுற்றுப் பயணங்களை செய்து, இந்த குற்றச் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர்.

அவர்களை தடுக்கும் நோக்கில் அந்தந்த நாடுகளின் அரசாங்கங்கள், ஆட்ட நிர்ணய சதிக்கு எதிரான தண்டனையை குற்றவியல் சட்டத்தின் கீழ் விதிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, சர்வதேச கிரிக்கட் பேரவையின் பிரதம நிறைவேற்றாளர் டேவிட் ரிட்சஸன் தெரிவித்துள்ளார்.

அண்மையில் இலங்கையின் முன்னாள் கிரிக்கட் வீரர் நுவான் சொய்ஸா உள்ளிட்டவர்கள் மீது சர்வதேச கிரிக்கட் பேரவையின் ஊழல் எதிர்ப்பு குழுவினால் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு தண்டனையும் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: