இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய தலைவராக தினேஷ் சண்டிமால்!

இங்கிலாந்துக்கு எதிராக நடக்கவுள்ள ஒருநாள் தொடரில் இலங்கை அணியின் தலைவராக தினேஷ் சண்டிமால் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
இலங்கை – இங்கிலாந்து அணிகள் மோதும் ஒருநாள் தொடர் அக்டோபர் 10-ஆம் திகதி தொடங்கவுள்ளது.
அந்த தொடருக்கான இலங்கை அணித்தலைவராக தினேஷ் சண்டிமாலை தேர்வு குழுவினர் நேற்று தேர்வு செய்ய முடிவெடுத்துள்ளனர்.
இலங்கை அணியின் ஒருநாள் மற்றும் டி20 தொடரின் தலைவராக தற்போது உள்ள ஏஞ்சலா மேத்யூஸ், அப்பதவியில் இருந்து ராஜினாமா செய்ய நிர்வாகம் அவரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
Related posts:
ICC யின் நடவடிக்கைகள் குறித்து தென் ஆபிரிக்கா வீரர் அதிருப்தி!
டோனியுடன் சேர்ந்த கோஹ்லி!
தேசிய கால்பந்தாட்ட பெண்கள் அணியில் யாழ் வீராங்கனைகள் ஆறு பேருக்கு இடம்!
|
|