அவுஸ்திரேலியா அணியை விட இலங்கை அணி சிறந்தது – ஹெரத்!

Monday, November 14th, 2016

இலங்கை அணி அண்மையில் ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் போட்டிகளில் வென்று தொடரை கைப்பற்றியது.

இதே போன்று இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய அவுஸ்திரேலியா அணியையும் 3-0 என்ற கணக்கில் தொடரை வென்று அசத்தியது. இதன் மூலம் கடைசியாக விளையாடிய ஐந்து டெஸ்ட் போட்டிகளிலும் இலங்கை அணி வெற்றி பெற்று இரண்டு தொடரையும் கைப்பற்றியுள்ளது.

இது குறித்து இலங்கை அணித் தலைவர் ஹெராத் கூறுகையில், இந்த இரு தொடர்களில் தாங்கள் வெற்றி பெற்றதன் மூலம் வரும் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்படுவோம் என்றும் இது இலங்கை அணி வீரர்களுக்கு 100 சதவீதம் தன்னம்பிக்கை கொடுத்துள்ளது என கூறியுள்ளார்.

மேலும் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் சிறந்து விளங்கும் அவுஸ்திரேலியா அணி கூட கடைசியாக பங்குபெற்ற நான்கு டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது. அந்த நான்கு டெஸ்ட் போட்டிகளில் 3 போட்டி இலங்கை மண்ணிலும், 1 போட்டி அதன் சொந்த மண்ணிலும்.

இதன் மூலம் அவுஸ்திரேலியா அணி ஜீரோ இலங்கை அணி 5, இதை கருத்தில் கொண்டு ஒப்பிடும் போது இலங்கை அணி தான் தற்போதைக்கு டெஸ்ட் போட்டிகளில் அவுஸ்திரேலியா அணியை விட சிறந்த அணியாக கருதப்படுகிறது

201604180857058191_Rangana-Herath-retirement-from-oneday-cricket_SECVPF

Related posts: