இலங்கை அணியில் குசல் ஜனித்துக்கு பதிலாக குசல் மெண்டிஸ்!

நாளை ஆரம்பமாகவுள்ள இலங்கை பங்களாதேஸ் அணிகளுக்கு இடையிலான இருபதுக்கு 20 போட்டித் தொடரில் இருந்து இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் குசல் ஜனித் பெரேரா விலகியுள்ளார்.
அவருக்கு ஏற்பட்ட உபாதை குணமாகாததால் அவரை ஓய்வெடுக்குமாறு மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
இரண்டு போட்டிகள் அடங்கிய இந்த இருபதுக்கு 20 தொடருக்கான 15 பேர் அடங்கிய அணியில் குசல் ஜனித் பெரேரா உள்வாங்கப்பட்டிருந்தார். எனினும் இந்த போட்டியில் அவர் பங்கேற்க முடியாததால் அவருக்கு பதிலாக அந்த அணியில் குசல் மெண்டிஸ் இணைக்கப்பட்டுள்ளார்.
Related posts:
இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றது இந்தியா!
தொடரை வென்றது தென்னாபிரிக்கா!
மகளிர் இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் - தென் ஆபிரிக்க மகளிர் அணி 6 ஓட்டங்களால் வெற்றி !
|
|