பிரேசில் ஒலிம்பிக் கமிட்டி தலைவர் சஸ்பெண்ட்!

Monday, October 9th, 2017

பிரேசில் ஒலிம்பிக் கொமிட்டி தலைவர் கார்லோஸ் நூஸ்மானை சஸ்பெண்ட் செய்துள்ளதாக சர்வதேச ஒலிம்பிக் நிர்வாகம் அறிவித்துள்ளது.

75 வயதான நூஸ்மான் ரியோ டி ஜெனீரோவில் ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கான வாய்ப்பை பெறுவதற்காக வாக்குக்கு பணம் கொடுத்தது உள்ளிட்ட ஊழல்களில் ஈடுபட்டதாகக் கூறி பிரேசில் போலீஸார் அவரை கைது செய்தனர்.

அதைத் தொடர்ந்து அவரை சஸ்பெண்ட் செய்துள்ளது ஐஓசி.  இதேபோல் பிரேசில் ஒலிம்பிக் கமிட்டியையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ள ஐஓசி, இதனால் பிரேசில் வீரர்கள் பாதிக்கப்படமாட்டார்கள்.

அவர்கள் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கலாம் என தெரிவித்துள்ளது. 1995 முதல் பிரேசில் ஒலிம்பிக் கமிட்டியின் தலைவராக இருந்து வந்த நூஸ்மானின் சொத்து மதிப்பு கடந்த 10 ஆண்டுகளில் 457 சதவீதம் அதிகரித்திருக்கிறது. ஆனால் நிதி ஆதாரத்துக்கான முறையான ஆவணங்கள் எதுவும் இல்லை என்று பிரேசில் அரசுத் தரப்பு வழக்குரைஞர் குற்றம்சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts: