மோசமான சாதனை படைத்த ரோஹித் ஷர்மா!

Tuesday, May 22nd, 2018

மும்பை இந்தியன்ஸ் அணித்தலைவர் ரோஹித் ஷர்மா துடுப்பாட்டத்தில் மோசமான சாதனையை ஒன்றை நிகழ்த்தியுள்ளார்

ஐ.பி.எல் தொடரில் நடப்பு சாம்பியன் அணியான மும்பை அணி, டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றாலே அடுத்த சுற்றுக்கு முன்னேறிவிடும் என்ற முனைப்பில் விளையாடியது.

ஆனால், 11 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதன்மூலம், இந்த சீசனில் விளையாடிய 14 போட்டிகளில், 8 போட்டிகளில் தோல்வியடைந்ததால் Play Off சுற்று வாய்ப்பை மும்பை இழந்து வெளியேறியது.

மும்பை அணியின் தோல்விக்கு அணித்தலைவர் ரோஹித் ஷர்மாவின் மோசமான Form முக்கிய காரணமாக அமைந்தது. இந்த தொடரில் 14 ஆட்டங்களிலும் களமிறங்கிய ரோஹித் ஷர்மா 286 ஓட்டங்கள் மட்டுமே எடுத்துள்ளார்.

இதன்மூலம், ஒரு தொடரில் 300 ஓட்டங்களுக்கு கீழ் முதன்முறையாக அடித்து மோசமான சாதனையை பதிவு செய்துள்ளார். மேலும் இவரின் துடுப்பாட்ட சராசரி 23.83 ஆகும்.

இதற்கு முன்பு ரோஹித் ஷர்மா கடந்த 2013ஆம் ஆண்டில் 19 போட்டிகளில் விளையாடி 538 ஓட்டங்கள் குவித்திருந்தார். அதில் அவரின் சராசரி 38.42 ஆகும்.

இதுவரை ரோஹித் ஷர்மா குவித்த ஓட்டங்கள்

2008ஆம் ஆண்டு – 404 ஓட்டங்கள்

2009ஆம் ஆண்டு – 362 ஓட்டங்கள்

2010ஆம் ஆண்டு – 404 ஓட்டங்கள்

2011ஆம் ஆண்டு – 372 ஓட்டங்கள்

2012ஆம் ஆண்டு – 433 ஓட்டங்கள்

2013ஆம் ஆண்டு – 538 ஓட்டங்கள்

2014ஆம் ஆண்டு – 390 ஓட்டங்கள்

2015ஆம் ஆண்டு – 482 ஓட்டங்கள்

2016ஆம் ஆண்டு – 489 ஓட்டங்கள்

2017ஆம் ஆண்டு – 333 ஓட்டங்கள்

Related posts: