இலங்கை அணிக்கு எதிரான இருபதுக்கு 20 தொடர் – இந்திய அணித் தலைவராக ஹர்த்திக் பாண்டியா!
Thursday, July 11th, 2024
இலங்கை அணிக்கு எதிரான இருபதுக்கு 20 தொடரின் இந்திய அணித் தலைவராக ஹர்த்திக் பாண்டியா செயற்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
அண்மையில் நிறைவடைந்த இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடருடன் இந்திய அணியை வழிநடத்திய ரோஹித் சர்மா ஓய்வை அறிவித்திருந்தார்.
இந்தநிலையில், எதிர்வரும் 28 ஆம் திகதி இலங்கை அணியுடன் இடம்பெறவுள்ள மூன்று போட்டிகளைக் கொண்ட இருபதுக்கு 20 தொடருக்கு புதிய தலைவராக ஹர்த்திக் பாண்டியா செயற்படவுள்ளதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.
அதேநேரம், இலங்கை அணியுடனான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கு கே.எல். ராஹுல் தலைவராக செயற்படுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
சொந்த செலவில் இங்கிலாந்து செல்லும் இலங்கை கிரிக்கெட் நிர்வாக சபை உறுப்பினர்கள்!
நேருக்கு நேர் மோதி விபத்து: கால்பந்து போட்டியில் பரிதபமாக உயிரிழந்த வீரர்!
அணித்தலைவர் பொறுப்பிலிருந்து விலகினார் கம்பீர்!
|
|
|


