இலங்கைப் பல்கலைக்கழக அணியில் யாழ். பல்கலையின் வீராங்கனை இடம் – பயிற்றுவிப்பாளராக யாழ். பல்கலையின் உடற்கல்விப் போதனாசிரியர்!

உகண்டாவில் இடம்பெறவுள்ள உலகப் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான வலைப்பந்தாட்டத் தொடரில் பங்குபற்றும் இலங்கைப் பல்கலைக்கழக வலைப்பந்தாட்ட அணியில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வீராங்கனையொருவர் இடம்பிடித்தார்.
உகண்டாவின் கம்பலாவில் செப்ரெம்பர் மாதம் 17 ஆம் திகதி தொடக்கம் 21 ஆம் திகதி வரை பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான வலைப்பந்தாட்டத் தொடர் நடைபெறவுள்ளது.
இந்தத் தொடருக்கான அணியிலேயே யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வீராங்கனையான சாம்பவி றமணன் இடம்பிடித்துள்ளார்.
அத்துடன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உடற்கல்விப் போதனாசிரியர் சுரேந்தினி சிதம்பரநாதன் இலங்கைப் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான தேசிய அணியின் பயிற்றுவிப்பாளராக கடமையாற்றவுள்ளார்.
Related posts:
பந்து தலையில் தாக்கியதால் கிரிக்கெட் வீரர் கௌஷல் சில்வா மருத்துவமனையில்..!
வர்ணனையாளராகும் சங்கக்கார!
2019 ஆம் ஆண்டு உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணை!
|
|