இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நியூசிலாந்து அணி!

Saturday, July 6th, 2019

நியூசிலாந்து தேசிய கிரிக்கெட் அணியானது டெஸ்ட் போட்டிகள் இரண்டு மற்றும் இருபதுக்கு -20 போட்டிகள் மூன்றில் விளையாட எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 03ம் திகதி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.

போட்டிகளில் முதலாவது டெஸ்ட் போட்டியானது எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 14ம் திகதி காலி கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

அத்துடன் நியூசிலாந்து அணியானது செப்டம்பர் மாதம் 07ம் திகதி இலங்கையில் இருந்து செல்லவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

போட்டி அட்டவணை;

ஆகஸ்ட் 8-10 – மூன்று நாட்கள் பயிற்சிப் போட்டி – காட்டுநாயக்க தொழிற்சங்க மைதானம்

ஆகஸ்14-18 – முதலாவது டெஸ்ட் போட்டி – காலி மைதானம்

ஆகஸ்ட் 22-26 – இரண்டாவது டெஸ்ட் போட்டி பீ சரா ஓவல் மைதானம்

ஆகஸ்ட் 29 – பயிற்சி இருபதுக்கு 20 போட்டி – காட்டுநாயக்க தொழிற்சங்க மைதானம்

ஆகஸ்ட் 31 முதலாவது இருபதுக்கு 20 போட்டி – பிரேமதாச மைதானம்

செப்டம்பர் 02 இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி – பிரேமதாச மைதானம்

செப்டம்பர் 06 மூன்றாவது இருபதுக்கு 20 போட்டி – பல்லேகல மைதானம்

Related posts: