இந்திய அணி குறித்து கவாஸ்கர்!

Wednesday, September 27th, 2017

ஒரு நாள் சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் தமது திறமையினை வெளிப்படுத்தியுள்ள இந்திய அணி நிச்சயமாக சிறந்த அணி என்பதில் எந்தவித மாற்று கருத்துக்களும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணியின் முன்னாள் தலைவரும் வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.இந்திய தொலைக்காட்சி ஒன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

காலத்திற்கு காலம் இந்திய அணி பல தமது சிறப்புத் தன்மையினை வெளிப்படுத்தி வந்த போதிலும், தற்போதைய இந்திய அணி மிகத்திறமையினை கொண்ட அணியாக திகழ்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

துடுப்பாட்ட வரிசையில் 8 அல்லது 9 வீரர்கள் அண்மைக்கால போட்டிகளில் தமது சிறப்பு தன்மையை வெளிப்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.அதேபோன்று பந்து வீச்சாளர்களும் ஆகக்கூடிய சிறப்பு தன்மையினை வெளிப்படுத்தி வருவதாக கவாஸ்கர் தெரிவித்துள்ளார்

தம்மால் முன்வைக்கப்பட்ட கருத்துக்களை ஆழமாக ஆராயும் எவரும் தமது கருத்திற்கு மாற்று கருத்தினை வெளிப்படுத்த மாட்டார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கை இந்திய அணிகளுக்கு இடையே அண்மையில் இடம்பெற்ற போட்டியில் ஐந்துக்கு பூஜ்யம் என்ற கணக்கில் இந்தியா அணி வெற்றி கொண்டதை பெரிய அளவிலான வெற்றி என குறிப்பிட முடியாது.

ஏனெனில் இலங்கை அணி தற்போது பலம்வாய்ந்த அணியாக இல்லை. ஆனால், அவுஸ்திரேலிய அணி அனுபவம் வாய்ந்த ஆட்டக்காரர்களைக் கொண்டது அப்படியான அணியுடன் இடம்பெற்ற மூன்று போட்டிகளிலும், இந்திய அணி வெற்றி பெற்றமை சிறப்பான அம்சமாகும் எனவும் சுனில் கவாஸ்கர் அந்த செவ்வியில் தெரிவித்துள்ளார்.

Related posts: