பாகிஸ்தான் அணி 4 விக்கட்டுக்களால் வெற்றி!

Thursday, July 20th, 2023

இலங்கை அணிக்கு எதிரான முதலாம் டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் பாகிஸ்தான் அணி 4 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

131 என்ற இலக்கை நோக்கி தமது இரண்டாம் இனிங்ஸ்க்காக துடுப்பாடிய பாகிஸ்தான் அணி இன்றைய இறுதி நாள் ஆட்டத்தில் 6 விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து போட்டியின் வெற்றியிலக்கை கடந்தது.

முன்னதாக தமது இரண்டாம் இனிங்ஸ்க்காக துடுப்பாடிய இலங்கை அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 279 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. பாகிஸ்தான் அணி அதன் முதல் இன்னிங்ஸில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 461 ஓட்டங்களையும், இலங்கை அணி தமது முதலாம் இன்னிங்ஸில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 312 ஓட்டங்களையும் பெற்றமை குறிப்பிடத்தக்கது

Related posts: