கொள்கையை மாற்றியதையது ஃபிஃபா – உலகக் கிண்ணக் கால்பந்து போட்டிகள் நாளை ஆரம்பம் – விதிக்கப்பட்டது தடை!

Saturday, November 19th, 2022

உலகக் கிண்ணக் கால்பந்து போட்டிகள் இடம்பெறவுள்ள கட்டாரின் எட்டு மைதானங்களில் மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

போட்டிகளில் ஆரம்பமாவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் ஃபிஃபா தனது கொள்கையை மாற்றியதையடுத்து இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

கட்டார் இஸ்லாமிய நாடு என்ற அடிப்படையில், இந்த மது விற்பனை கடுமையாக கட்டுப்படுத்தப்பட்டாலும், ‘விளையாட்டு மைதானங்களுக்குள் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில்’ மதுபானம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகக் கிண்ண கால்பந்து போட்டிகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை கத்தார் -ஈக்வடார் அணிகளின் ஆட்டத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

பிஃபாவின் முக்கிய அனுசரணையாளரான , பீர் தயாரிப்பு நிறுவனம், உலகக் கிண்ணப்போட்டிகளின் போது, பீர் விற்பனை செய்வதற்கான பிரத்யேக உரிமைகளைக் கொண்டிருந்தது.

எனினும் போட்டிகளை நடத்தும் கட்டார் நாட்டு அதிகாரிகளுக்கும் பிஃபாவிற்கும் இடையே நடந்த விவாதங்களைத் தொடர்ந்து மைதானங்களில் மதுபான விற்பனை தடைசெய்யப்பட்டுள்ளது. எனினும் கால்பந்து ஆதரவாளர்கள் சங்கம் இந்த முடிவை ஆட்சேபித்துள்ளது.

000

Related posts: